நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலை நையாண்டி செய்து வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளியானதும், சிவசேனா கட்சியினர் கடும் கோபமடைந்து, அந்த வீடியோ படப்பிடிப்பு நடந்த ஸ்டுடியோவை அடித்து துவம்சம் செய்தனர். ஸ்டுடியோவை நாசப்படுத்திய சிவசேனாவின் ஷிண்டே பிரிவை சேர்ந்த தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசேனா (ஷிண்டே பிரிவு) பொதுச் செயலாளர் ராகுல் கனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து வீடியோ வெளியிட்ட நடிகர் குணால் கம்ராவுக்கு ராகுல் கணல் அனுப்பிய வாட்ஸ்-அப்பில் ''இது டிரெய்லர் மட்டும்தான். இனிமேல்தான் மெயின் பிக்சரே... நீங்கள் மும்பையில் இருக்கும் வரை சிவசேனா பாணியில் உங்களுக்கு நல்ல பாடம் கிடைக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஷிவ் நாடாரின் ரூ.200 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் தில்லுமுல்லு: வீடியோ போட்டவரின் வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த போலீஸார்..!
மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சியால், கோபமடைந்த சிவசேன தொண்டர்கள் இந்த ஸ்டுடியோவின் மீது தங்கள் கோபத்தை காட்டி அடித்து நொறுக்கினர். அங்கு நாற்காலிகள், மின் விளக்குகள் உடைக்கப்பட்டன. ஸ்டுடியோவை சேதப்படுத்தியதற்காக சிவசேனா யுவ சேனா (ஷிண்டே பிரிவு) பொதுச் செயலாளர் ராகுல் கனல் மற்றும் 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குணால் கம்ராவின் வீடியோ குறித்து சிவசேனா யுவ சேனா (ஷிண்டே பிரிவு) பொதுச் செயலாளர் ராகுல் கனல் கூறுகையில், ''இது சட்டத்தை கையில் எடுப்பது பற்றியது அல்ல. இது முற்றிலும் எங்கள் சுயமரியாதையைப் பற்றியது. நாட்டின் மூத்த குடிமக்கள், மரியாதைக்குரிய குடிமக்கள் என்று வரும்போது, உங்கள் சீனியர்கள் குறிவைக்கப்படும்போது, அந்த மனநிலை கொண்ட ஒருவர் மீது உங்களுக்கு கோபம் ஏற்படாதா?

நான் சிவசேனா குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏக்நாத் ஷிண்டே எங்கள் மூத்தவர். எங்களை அவமரியாதை செய்யும் மனநிலை கொண்ட அவருக்கு எதிர்காலத்திலும் இதே போன்ற பாடம் கற்றுக் கொடுப்போம்'' என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அங்கன்வாடியில் 16,000 காலி பணியிடங்கள் ஒரே மாதத்தில் நியமிக்கப்படும்.. அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..!