மருதமலை முருகன் கோவிலில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 4ம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, மருத மலை கோவில் செயல் அலுவலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், குடமுழுக்கு விழாவில், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மந்திரங்கள் ஓதி யாகசாலை பூஜைகள் நடத்தப்படும். மேலும் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் தமிழ் மந்திரங்கள் ஓதுவார்கள். பன்னிரு திருமுறைகள், திருபுகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடமுழுக்கு தொடர்பாக நாம் தமிழர் தாக்கல் செய்த மனு.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம், தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக அரசாணை பிறப்பிப்பது குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருதமலை முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு.. நீதிமன்றத்தில் உறுதி அளித்த தமிழக அரசு..!