மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இருபெரும் நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மியான்மர் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாங்காக் நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமாட்டமாகின. நிலநடுக்கத்தால் அலறி துடித்த மக்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். இருப்பினும் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் அண்டை நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ஏப். 3 முதல் 6 வரை தாய்லாந்து, இலங்கை பயணம்..!

இதனிடையே, மியான்மரில் நிகழ்ந்துள்ள இந்த நில நடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதேபோல் சீனாவின் தென்மேற்கில் உள்ள யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள இம்பால், கொல்கத்தா ஆகிய நகரங்களில் லேசான அதிர்வுகளை உணர முடிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கவலை அடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும், இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார். இது சம்பந்தமாக, அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி 3 திட்டங்களுடன் ஏப்ரல் 6-ல் தமிழகம் வருகை.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சில் முக்கிய முடிவு..!