ஈரோட்டில் தேர்தல் பரப்புரையின் போது பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் பெண்களை புரட்சிப் பெண் அல்ல வறட்சிப் பெண் என விமர்சித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியது.
ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களுக்கிடையே உரையாற்றிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இலவச பஸ் பாஸ் யாரு கேட்டது. பள்ளிக்கட்டணம் 5 லட்சம் ரூபாய், கல்லூரி கட்டணம் 10 லட்சம் ரூபாய் கட்டி சீட் வாங்குகிறோம். பஸ் பாஸ் ஃப்ரீ நாங்க கேட்டோமா?, எங்களுக்கு அந்த கல்வியை தரமாக இலவசமாக கொடு, பஸ்ஸுக்கு நாங்க காசு கொடுத்து போறோம் என்றார்.

புரட்சிப் பெண் திட்டம், யாரு புரட்சிப்பெண் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துகிற என் தங்கச்சி அல்ல புரட்சிப்பெண். தன் மானத்திற்கு இழுக்கு வந்தபோது தன்னை பாலியல் சீண்டலுக்கு ஆட்படுத்திய ஒருவனைப் பற்றி புகார் அளித்தால் ஊடகம் தன்னை காட்டும், ஏசுவார்கள், பேசுவார்கள், இழிவு செய்வார்கள், நீதிமன்றத்தில் நிற்பார்கள் விசாரிப்பார்கள். தன் தன்மானத்திற்கு இழுக்கு வரும் என தெரிந்தும். அதைப்பற்றி கவலைப்படாமல் தன்னை ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அண்ணா பல்கலைக்கழகத்திலே படித்த ஒரு தங்கை துணிந்து போய் புகார் அளித்தார். அந்த பெண் தான் இந்த நாட்டிலே உண்மையிலேயே புரட்சிப்பெண். ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி நிற்றால், அவள் புரட்சிப் பெண்.. அல்ல வறட்சிப் பெண் என கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் முன்பு வெடித்த சர்ச்சை; நடுரோட்டில் கட்டி உருள தயாரான நாதக - காங்கிரஸ் தொண்டர்கள்!

நீங்கள் எழுதி வையுங்கள், உங்கள் மகனாகச் சொல்கிறேன் 2026 தேர்தலை சந்திக்க வருகிறபோது இதே திமுக குடும்பத்தலைவிக்கு 2 ஆயிரம் அல்லது 2500 ரூபாய் தருகிறோம் என்று அறிவிக்குதா? இல்லையா? என்பதை மட்டும் பாருங்கள். இவர்கள் ஆட்சியை விட்டு கீழே இறங்குவதற்குள் 10 லட்சம் கோடியாக கடனை உயர்த்துவார்கள் என்றார்.
இதையும் படிங்க: பெரியார் பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கோங்க - சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை!