விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆளும் திமுக ஆட்சி மக்கள் விரும்பாத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான அதிருப்தியில் திமுகவிற்கு வாய்ப்பளித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தி.மு.க.அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் கூட தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது. வேங்கை வயல் விவகாரம் துர்பாக்கிய நிகழ்வு ஆகும். இந்தியா முழுவதும் வருத்தத்தை தரும் நிகழ்வாக இருந்தது.காவல் துறை எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

சமத்துவம் சமூக நீதி, பெண் உரிமைக்காக போராடியவர் தந்தை பெரியார் அரசியல் ஆதாயம் தேடாமல் உலகம் முழுவதும் பாராட்டக்கூடியவர் அனைவரும் பின்பற்ற கூடியவர் தந்தை பெரியார். சீமான் யோசித்து பேச வேண்டும்.சீமான் சுய விளம்பரத்திற்காக பேசி வருகிறார்.தந்தை பெரியாரை தாக்கி பேச வேண்டிய அவசியமில்லை அவரை சீமான் இழிவாக பேசுவது வருத்தம் அளிக்கிறது.
சீமான் பேசுவது வீரத்திற்காண அடையாளம் கிடையாது.பெரியார் குறித்து சீமான் பேசுவது கண்டிக்கத்தக்கது.சீமான் பேசி வருவது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் அவரது பெரியாருக்கு எதிரான பேச்சு அதிகரித்து வருகிறது. தெரிந்து பேசுகிறாரா இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.பெரியார் குறித்து பேசுவதை சீமான் நிறுத்தி கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: “எங்க தில்லு யாருக்கும் கிடையாது” - அதிமுக, பாஜகவை மறைமுகமாக சாடிய சீமான்!

தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் கடந்த ஆண்டே தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தால் ஏலமே நடந்திருக்காது.மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து பாஜகவின் முழு முயற்சி மேகொண்டு நிறுத்தியுள்ளது. டங்ஸ்டன் வெற்றி முழுவதும் பாஜகவை சாரும்.டங்ஸ்டன் சுரங்கம் நிறுத்தத்திற்கு பிரதமரும் மத்திய அமைச்சர், அண்ணாமலை ஆகியோர் மட்டுமே காரணம் என்றார்.
இதையும் படிங்க: வேஷம் போடுறாங்க... கட்சி ஆரம்பிச்சதுமே ஆட்சிக்கு வரத் துடிக்கிறாங்க... சீமான், விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்!