நேஷனல் ஹெரால்டு பத்திரிகை என்பது நேருவின் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் மூலம் நடத்திவரப்பட்டது. அதன் பிறகு, கடன் பிரச்சினையால் இந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், இதனை சரி செய்ய காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் வழங்கியது.இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார் அதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்கு சட்டவிரோதமாக யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை இதனை விசாரித்தது. இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தியும், சோனியாகாந்தியும் மறுத்த நிலையில், இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டது. பலகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 998 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: 'இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவது எப்படி..?' சோனியாவுக்கு குறி..! அலறிப்போன ஹெச்.ராஜா

இதன் பிறகு 700 கோடி ரூபாய் மதிப்பிலான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் முதல் முறையாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வக்பு மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜக அரசின் வெட்கக்கேடு.. சோனியா ஆவேசம்..!