அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் 2025ம் ஆண்டுக்கான 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், 2024 ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த விழாவில் விருது வாங்கியவர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம். ஜெஸ்ஸி ஐசன்பெர்க் இயக்கிய எ ரியல் பெயின் படத்திற்காக நடிகர் கீரன் கல்கினுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை 'FLOW' வென்றுள்ளது.
இதையும் படிங்க: விஷ வாயு தாக்கி நடிகர், மனைவி, நாய் மர்ம மரணம்? - தற்கொலையா, கொலையா விசாரணை...

மேலும், சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை 'IN THE SHADOW OF CYPRESS' வென்றது. தொடர்ந்து, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'WicKed' திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார்.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Conciave படத்திற்காக Peter Straughan வென்றுள்ளார். சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை 'THE SUBSTANCE' திரைப்படம் தட்டிச் சென்றது. மேலும், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அனோரா படத்திற்காக சீன் பேக்கர் வென்றார்.

எமிலியா பெரஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் நடிகை ஜோ சல்டானா.
சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை No Other Land ஆவணப்படம் வென்றது. இந்த ஆவணப்படம் பாலஸ்தீன - இஸ்ரேல் போரை அடிப்படையாகக் கொண்டது.
பெவர்லி ஹில்ஸில் உள்ள சாமுவேல் கோல்ட்வின் திரையரங்கில் இந்த விருதுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன. அனோரா, தி ப்ரூடலிஸ்ட், தி கம்ப்ளீட் அன்னோன் கான்க்ளேவ், டூன்: பார்ட் 2, உள்ளிட்ட பல படங்கள் இந்த முறை விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: நீங்க 2001இல்தான் எம்.எல்.ஏ... நான் 1989இலேயே எம்.எல்.ஏ.. ஓபிஎஸ் சொந்த ஊரில் மாஸ் காட்டிய இபிஎஸ்..!