மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவுக்கு வர்த்தக ஒப்பந்தம் செய்ய சென்றிருக்கும் நிலையில், இந்திய விவசாயிகள், உற்பத்தியாளர்களின் நலனில் மத்திய அரசு சமரசம் செய்துவிட்டதா என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் நேற்று அளித்த பேட்டியில் "பரஸ்பரவரியை ஏப்ரல் 2ம் தேதி முதல் அமல்படுத்துகிறோம். பல நாடுகள் அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்ற, ஆனால், நாங்கள் அந்த நாடுகளின் பொருட்களுக்கு குறைவாக வரிவிதிக்கிறோம். இதில் இந்தியா 100 சதவீதத்துக்கும் அதிகமாக வரிவிதிக்கிறது. இருப்பினும் வரியைக் குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில்,
இதையும் படிங்க: ஆண்கள்தான் 90 சதவீதம் முதல்வரா இருக்காங்க ! கனிமொழி ஆதங்கம்…
“மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வாஷிங்டன் நகருக்கு வர்த்தகப் பேச்சு நடத்த சென்றுள்ளார். ஆனால் அதிபர் ட்ரம்ப், மோடி அரசு வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டதாக பேசியுள்ளார். இந்திய விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நலனில் சமரசமம் செய்து கொண்டீர்களா. பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 10ம் தேதி தொடங்கியும் அங்கு வந்து விளக்கம் அளித்து நம்பிக்கையளிக்க வேண்டும்.

அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து இந்திய அரசை விமர்சிப்பதும், இந்தியாவை பிரதமர் மோடி வெளிப்படுத்திவிட்டார் என்பதும், இந்தியாவுக்கு அவமானம். மோடி அச்சப்படுகிறார் அதனால்தான் வரியைக் குறைத்துவிட்டார் என அதிபர் ட்ரம்ப் கூறுவதும், அவமானம். அதிபர் ட்ரம்பை சமாதானப்படுத்த எந்தவகையான சமரசத்தை செய்தீர்கள் என பிரதமர் மோடி விளக்க வேண்டும். எதற்காக தேசத்தின் மரியாதை அடமானம் வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை ஆலோசிக்க பாஜக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும். இது தீவிரமான விவகாரம், இதில் தேசத்துக்கு பிரதமர் மோடி அரசு பதில் அளிக்க வேண்டும், தேசத்தின் நலன்தான் உச்சகட்டம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆண்டு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்த உத்தரகாண்ட் வாருங்கள்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு..!