ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஆவார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றார். தொடரை வென்ற பிறகு, அவர் சிறப்பாக செயல்பட்டதற்கான பாராட்டைப் பெற்றார்.

நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரில் விளையாடிய போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் சுமித் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்தார். அத்துடன் பீல்டிங்கிலும் மாபெரும் சாதனைகள் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 கேட்சுகள் பிடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் இந்த சாதனையை படைத்த 5-வது பீல்டர் சுமித் ஆவார்.
இதையும் படிங்க: பவுலிங்கில் அசத்திய குஜராத்... 105 ரன்களில் சுருண்ட உபி வாரியர்ஸ் அணி..!

2017இல் தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசையில் 947 புள்ளிகள் பெற்றார். இது துடுப்பாட்ட வரலாற்றில் வீரர் ஒருவர் பெறும் இரண்டாவது அதிகபட்ச புள்ளியாகும். வலது கை சுழற்பந்துவீச்சாளராக முதலில் அணிக்குத் தேர்வான இவர் தற்போது பேட்ஸ்மேன் ஆக விளையாடி வருகிறார்.

இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார். மேலும் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதையும், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆலன்பார்டர் பதக்கத்தையும் , 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆஸ்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.

தற்போது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் மற்றும் டி20 ஃபார்மட்டில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்.. உடனே தகவல் கொடுத்த சிங்கப்பெண்.. அடித்து மண்டையை உடைத்த உறவினர்கள்..!