தான் நடித்த படங்களில், காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான எஸ்.வி.சேகர், நிஜத்தில் விஷமத்தன்மை கொண்ட கருத்துக்களை கூறி, வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
நாடக சபா வைத்து நடத்திவரும் எஸ்.வி.சேகர், பாஜக கட்சியில் இருந்து வந்த நிலையில் பலமுறை அக்கட்சியை சேர்ந்த தலைவர்களைப் பற்றி எல்லை மீறி பேசியிருக்கிறார். ஆடிய கால்கள் நிற்காது என்பது போல வில்லங்கமாக பேசிவரும் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களையும் அவதூறாகப்பேசி வில்லங்கத்தில் சிக்கினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பத்திரிகையில் உயரிய இடத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் என வாய்க்கு வந்தபடி பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்தது. ஊடகத்துறையில் சமீப காலமாக பெண்கள் சாதித்து வரும் நிலையில், எஸ்.வி.சேகரின் பேச்சு அவதூறு கிளப்பும் வகையில் இருந்தது.
இதையும் படிங்க: ஸ்பெஷல் அங்கீகாரம்! மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு!
இந்த அவதூறு பேச்சுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு ரூ.15 ஆயிரம் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த நிலையில் இப்போது மீண்டும் பெண் பத்திரிகையாளர்களை இழிவு செய்துள்ளார் எஸ்.வி.சேகர்.

நாரத கானா சபை சார்பில் அண்மையில் நடைபெற்ற நாடகத்தில் எம்.எல்.ஏ வேடம் போட்டு நடித்த எஸ்.வி.சேகரிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது எஸ்.வி.சேகர் தனது மடியை கட்டி பெண் பத்திரிக்கையாளரை அமரச் சொல்வது ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் இருக்கிறது. அதேபோல வீடியோவில் இறுதியிலும் எம்.எல்.ஏ சொல்லும் பதிலை கேட்டு என் பத்திரிகையாளர் தலையே சுற்றுகிறது எனக் கூற, இந்த தலை சுற்றலுக்கு தான் காரணம் இல்லை என இரட்டை அர்த்தத்தில் எஸ்.வி.சேகர் பேசியது முகம் சுளிக்க வைத்தது.

அவதூறு வழக்கு விசாரணையில் பெண் பத்திரிகையாளர் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர், திருந்தாமல் மீண்டும் அதேபோல பேசியிருப்பது பத்திரிக்கையாளர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெகட்டிவ் பப்ளிசிட்டிக்காக பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசி வரும் வரும் எஸ்.வி.சேகருக்கு காவல்துறை மாதிரியான அமைப்புகள் தகுந்த பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்'' எனக் கொந்தளிக்கிறார்கள் பத்திரிகை துறையினர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து செயின் பறிப்பு.. என்கவுன்டரில் மாஸ் காட்டிய போலீஸ்.. காவல் ஆணையர் விளக்கம்..!