தற்போதுள்ள தம்பதியினர் சர்வ சாதாரணமாக விவாகரத்து முடிவை எடுக்கின்றனர். திரைத்துறை பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் என பலரும் தங்கள் திருமண வாழ்வில் சிக்கலை சந்தித்ததும் அவர்களின் இறுதிக்கட்ட முடிவாக விவாகரத்து உள்ளது. விவாகரத்து பெற்றதும் அவரவ வாழ்க்கையை வாழ்வதுடன் ஓருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தாய்லாந்திலும் நடந்துள்ளது. இந்த ஜோடி மொத்தமாகவே வேற லெவல் என்ற அளவுக்கு வாழ்த்து இருக்காங்க. அதுவும் லவ்க்காக கின்னஸ் சாதனையெல்லாம் படைத்தனர். கடைசியில் அவர்களுக்கும் திருமண வாழ்க்கை கசப்பாகி போக இருவரும் பிரிந்துள்ளனர். தாய்லாந்தை சேர்ந்த எக்கச்சாய் – டிரமாராட் ஜோடி பெரிய அளவில் பிரபலமானவர்கள். அதுவும் எதில் தெரியுமா? முத்தத்தில்.

இருவரும் யாருக்கும் அதிகம் பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முத்தம் கொடுத்துள்ளனர். இதை சீரியஸாக எடுத்து கொண்ட இருவரும் சுமார் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் வரை தொடர்ந்து முத்தம் கொடுத்து சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே அதிக நேரம் முத்தம் கொடுத்த தம்பதி என்ற பெருமையையும் இவர்கள் பெற்றனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பும், மரியாதையும் வைத்திருப்பதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: துடைப்ப கட்டையை தூக்கிய 15000 பேர்..! கும்பமேளாவில் புதிய கின்னஸ் முயற்சி..!

இந்த சூழலில் இருவரும் திடீரென திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதாவது இருவரும் தவிர்க்க முடியாத காரணத்தில் பிரிவதாக தெரிவித்துள்ளனர். திருமண வாழ்க்கையில் பிரிந்தாலும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதே அன்புடன், மரியாதையுடன் நடந்து கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
உலகளவில் ஃபேமசான இருவரும் முத்தத்திற்காக பல நாட்களாக இருந்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
இருவருக்கும் அதே அன்பு குறையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தும் வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களே திருமண வாழ்க்கை வேண்டாம்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு பிரிந்து விட முடிவெடுத்துள்ளனர்
இதையும் படிங்க: ராஜ்யசபா சீட் கொடுக்க மறுத்த எடப்பாடியார்..! நான்கே வார்த்தையில் பிரேமலதா பதிலடி..!