கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை எனக் கூறினார். பாரதிய ஜனதா நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி, என்னை பொறுத்த வரை கட்சி மென் மேலும் வளர வேண்டும் என்பது தான் எனவும், நிறைய பேர் உயிரை கொடுத்து புண்ணியம் செய்து கட்சியை வளர்த்து இருக்கிறார்கள் என தெரிவித்த அவர்,புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது நிறைய பேசுவோம் என்றார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளரான துக்ளக் ரமேஷ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துவிட்டு திரும்பி வந்த பிறகு, அண்ணாமலை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரையும் பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்துவிட்டு வந்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டில் கூட்டணி தொடர்பாக அவருக்குஏற்பட்டுள்ள ஒரு மனக்கசப்பு மற்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரனுக்கு சான்ஸே இல்லை... பாஜகவின் பயங்கர திட்டம்... அடுத்த தமிழக தலைவர் இவரா..?

என்னுடைய பழைய கருத்தில் மாற்றம் இல்லை என சொன்னார், அது தவிர நான் தொண்டராக இருந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்றார். இந்த கருத்துக்கள் மூலம் அவர் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் தலைவர் பதவியில் தொடர்வதை விரும்பவில்லை என்று வெளிப்படுத்தினார். ஆகவே அதை நோக்கித்தான் இப்போதைய செய்திகள் வந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் பாரதிய ஜனதா கட்சி மேலிடம் கூட்டணியை உறுதிப்படுத்தக்கூடிய சூழல் அடுத்த சில தினங்களில் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே அண்ணாமலை அவர்களுக்கு பதிலாக ஒரு மாற்று ஏற்பாட்டை பாரதிய ஜனதா கட்சி செய்யக்கூடும் என்பதுதான் அவருடைய பேட்டியிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் எனத் தெரிவித்தார். இதன் மூலமாக அண்ணாமலை பதவி விலகவுள்ளதும், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக பாஜக தலைவர் பதவி... நமக்கேன் வம்பு..? உண்மையை உடைத்த அண்ணாமலை..!