மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எச் ராஜா மீது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கொடுத்த புகாரில் சேலம் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரையில் திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அதேபோல மலையின் உச்சியில் தர்க்கா ஒன்றும் அமைந்துள்ளது. இந்த தர்க்காவிற்கு சென்று வர தனி வழியும் உள்ளது இந்த நிலையில்தான் அதாவது இந்த மக்களை பிரிவுபடுத்துவதற்காகவும் அதேபோல மதக்கலவத்தை ஏற்படுத்துவதற்காகவும், திடீரென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், அதேபோல மூத்த நிர்வாகி ஹெச். ராஜாவும் திருப்பரங்குன்றம் மலையை பொறுத்தவரை முழுக்க முழுக்க அது முருகன் கோவிலுக்கு சொந்தமானது. அது முருகன் மலை அங்கு தர்க்கா என்பது ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பிரச்சனையை கிளப்பி வந்தார்கள். இந்த பிரச்சனை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெரும் விஸ்வரூபமாக வெடித்தது.
இதையும் படிங்க: திருட்டு மாடல் கிளப்பும் பிரச்சினை.. கோமாளித்தனத்துக்கு அளவே இல்லையா.? மு.க.ஸ்டாலின் மீது ஹெச்.ராஜா ஆவேச அட்டாக்.!

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொய் பேசி மதக்கலவரத்தை அண்ணாமலை, எச். ராஜா மக்களிடையே பரப்பி வருவதாகவும், அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஸ் மானஸ் சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார். அது தொடர்பாக ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது. குறிப்பாக பியூஸ் மானஸிடம் இருந்து அது தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் பெறப்பட்டு, அந்த ஆவணங்கள் அடிப்படையில் தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த நிர்வாகி எச் ராஜா ஆகியோர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தர்கா பிரச்சனை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச் ராஜா ஆகியோர் மத கலவரத்தை தூண்டியதாக சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே முத்துராமலிங்க தேவர் குறித்தும், தீபாவளியை கிறித்துவ அமைப்பினர் தடுக்கிறார்கள் என பேசியது தொடர்பாகவும் மூன்று புகார்களை அண்ணாமலை மீது பியூஸ் மானுஷ் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் ஒரு மரண சாஸ்திரம்.. திமுக அரசை பொளந்துகட்டிய ஹெச். ராஜா..!!