பீஹாரில் இந்தாண்டு அக்டோபர், நவம்பரிலும், மேற்கு வங்கம், தமிழகத்தில் அடுத்த ஆண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்த மூன்று மாநிலங்களிலும் அமித் ஷா அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் அமித் ஷா நாளை இரவு தமிழகம் வருகிறார். இந்தப் பயணத்தின் போது தேர்தல் தொடர்பாக பாஜக நி்ர்வாகிகளை அவர் சந்திக்க உள்ளார்.

நாளை (ஏப்.10) இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானத்தில் அமித்ஷா புறப்படுகிறார். இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதை தொடர்ந்து இரவு 10.40 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு வந்து இரவு தங்குகிறார். ஏப்.11
காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை ஹோட்டல் கிரான்ட் சோழாவில் முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற உள்ளது. பின்னர் மாலை 4.40 மணிக்கு சென்னை, மயிலாப்பூரில் உள்ள தியாகராஜபுரம் வருகிறார். அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதை தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு டில்லி புறப்படுகிறார்.

டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அமித் ஷா பேசுகையில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிவித்தார். அதன்பிறகு முதல் முறையாக அமித் ஷா தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என். ரவியை உடனே வீட்டுக்கு அனுப்புங்க.. மத்திய அரசுக்கு சிபிஎம் அட்வைஸ்.!
இதையும் படிங்க: ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடு.. பாஜகவுக்கு சவுக்கடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் செல்வபெருந்தகை!