2013ம் ஆண்டு தொடங்கி சுமார் 12 ஆண்டுகள் கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியது. 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்கலாம். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் ஒன்றுகூடி ரகசியமாக நடத்தும் வாக்கெடுப்பில், மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெறும் நபர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.

உக்ரைனை சேர்ந்த மைக்கோலா பைச்சோக் (45), அமெரிக்காவை சேர்ந்த ஜோசப் டோபின் (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் டேகிள் (67), இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலின் (70), ஸ்பெயினை சேர்ந்த ஜுவான் ஜோஸ் ஓமெல்லா (79), மால்டாவை சேர்ந்த மரியோ கிரெச் (68), ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் எர்டோ (72), பிரான்ஸை சேர்ந்த ஜீன்-மார்க் அவெலின் (66) உள்ளிட்டோர் புதிய போப் ரேஸில் இருக்கும் நிலையில், இந்த தேர்வு குழுவில் இந்திய கார்டினல்கள் நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: சனிக்கிழமை நடைபெறுகிறது போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு.. வாடிகன் அறிவிப்பு..!

இந்திய கார்டினல்கள் நான்கு பேரின் விவரங்கள் பின்வருமாறு:
1. பசேலியாஸ் கிளிமீஸ்:
ஐசக் தொட்டும்கல் என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு வயது 64. கேரள மாநில திருவனந்தபுரம் சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயரான இவர், இந்த திருச்சபையின் ஆயராக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு பிஷப்பான அவர், 2012-ல் கார்டினலானார்.
2. ஆண்டணி போலா:
63 வயதான இவர் ஐதாராபாத்தை சேர்ந்தவர். இந்தியாவின் முதல் தலித் கார்டினல் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அவரது நியமனம் திருச்சபையில் ஒரு சமத்துவத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது.

3.பிலிப் நேரி பெராவ்:
கோவா, டாமன் பேராயரான இவரது வயது 72. ஆசிய ஆயர்கள் மாநாடு, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு தலைவராக இருக்கும் இவர், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், புலம் பெயர்ந்து வந்தோரை ஆதரிப்பதற்கும் நீண்ட கால பங்களிப்பை அளித்து வருகிறார்.
4. ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு:
இந்தியாவின் 4 கார்டினல்களில் இவர் தான் மிகவும் இளையவர். இவருக்கு வயது 51. உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் இடையே ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த பாகுபாடு கொண்டவர் இவர்.
இதையும் படிங்க: போப் இறுதி அஞ்சலியில் அமைச்சர் நாசர் பங்கேற்பார்..! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!