குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ரத்தன்பூரில்தான் இந்த சம்பவம் நடந்தது. ரத்தன்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேஷ்பாய் மக்வானா. இவர் ஆமதாபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். ஜிதேஷ்பாய் குடும்பம் சாதாரான நடுத்தரக் குடும்பம். மனைவி, இரு குழந்தைகள், தாய், சகோதரி ஆகியோருடன் மிகவும் கடினமான சூழலில் ஜிதேஷ் வாழ்ந்து வருகிறார்.மத்திய அரசின இந்திய ஆவாஸ் யோஜனா திட்டத்தின் வீடு ஒதுக்கியும், அதற்கான முன்தொகை கொடுக்க முடியாமல் ஜிதேஷ் இருக்கிறார்.

இந்நிலையில் 2021-22ம் ஆண்டு நிலுவைத் தொகையாக ரூ.36 கோடி வருமானவரி செலுத்தக் கோரி வருமானவரி நோட்டீஸ் அனுப்பியதைப் பார்த்ததும், ஜிதேஷ் அதிர்ச்சிஅடைந்தார். ஜிதேஷ் சேமிப்புக் கணக்கில் ரூ.12 மட்டுமே இருக்கும் நிலையில் அன்றாட செலவுகளை சமாளிக்கவே திண்டாடும் நிலையில் ரூ36 கோடி வரி செலுத்தக் கோரிய நோட்டீஸ் அவருக்கு தூக்கிவாரிப் போட்டது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் பேரழகிகளுக்கு ஆபத்து... வளைத்து வளைத்து வேட்டையாடும் போலீஸ்..!
இதுகுறித்து ஜிதேஷ்பாய் நிருபர்களிடம் கூறுகையில் “நான் மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறேன். எனக்கு 36 கோடி ரூபாய் வரி செலுத்தக் கோரி வருமான வரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. என்னால் நம்பமுடியவில்லை. குடும்பத்தை நடத்தவே கஷ்டப்படும் நான் எவ்வாறு 36 கோடி வரி செலுத்துவது. இந்த விவகாரத்தை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றபோது, வரியைச் செலுத்துங்கள் அல்லது வருமானவரி துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசுங்கள் என்றனர்.

நானும் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு சென்று என் நிலைமையை தெரிவித்தேன். மாதம் ரூ.12 ஆயிர்ம் ஊதியம் பெறும் நான் எவ்வாறு 36 கோடி ரூபாய் வரி செலுத்துவது என்றேன். அதற்கு அவர்கள் ஜிஎஸ்டி அலுவலகம் செல்லுங்கள் என்றேன். அங்கு அதிகாரிகளிடம் முறையிட்டபோது, என்னை சைபர் குற்றப் பிரிவுக்கு சென்று புகார் அளிக்கும்படி தெரிவித்தனர். அவர்களிடம் கேட்டபோது, எங்கள் அதிகார வரம்பில் வராது போலீஸாரிடம் புகார் அளியுங்கள் என்றனர். போலீஸாரிடம் கேட்டபோது, இது எங்கள் பணி அல்ல, வேறு எங்காவது புகார் அளியுங்கள் என்றனர்” எனத் தெரிவித்தார்.

ஆனால் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ஜிதேஷ்பாய் பான் எண் தவறாக பயன்படுத்தப்பட்டு ஜிஎஸ்டி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகமான பணப்பரிமாற்றங்களை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்து விசாரிக்கிறார்கள். ஜிதேஷ் மீது விசாரணை நடந்து வருகிறது, யாரோ ஒருவர் இவரின் வங்கிக்கணக்கையும், பான் எண்ணையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனித வெள்ளி எதிரொலி.. தமிழகம் முழுவதும் மது கடைகளை அடைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!