வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, டெல்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப் -ஹரியானா எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சங்கத் தலைவர் தல்லேவால் மருத்துவ உதவி எடுத்துக்கொள்ள சம்மதித்திருப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் சுக்ஜீத் சிங் ஹர்டோஜண்டே தெரிவித்துள்ளார்.

மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் 20 கிலோ எடை குறைந்துவிட்டாா்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் நிராகரித்து வந்தார்.இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு சண்டீகரில் பிப்ரவரி 14-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜக்ஜித் சிங் தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற ஒப்புக் கொண்டதையடுத்து 121 விவசாயிகள் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு...

போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் தல்லேவால் சம்யுக்த கிஸான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இப்போது மருத்துவ உதவி எடுத்துக்கொண்டாலும், அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தல்லேவால் தெரிவித்துள்ளார். முன்னதாக தல்லேவாலுக்கு ஆதரவாக கனெளரியில் 111 விவசாயிகள் ஜனவரி 15ஆம் தேதியும் அதைத்தொடர்ந்து மேலும் 10 விவசாயிகள் ஜனவரி 17ஆம் தேதியும் காலவரையற்ற உண்ணாவிரத்தில் இறங்கினர்.
இதையும் படிங்க: ஆரம்பித்துவிட்டார்கள் தோழர்கள்.... ஜன.9 போக்குவரத்து தொழிற்சங்க போராட்டம்...