உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகிறார்கள்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்பட்டு வரும் கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடினால் செய்த பாவங்கள் தொலையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மதுபான கடத்தல் குற்றவாளியான 22 வயது பிரகாஷ் யாதவ் என்பவர் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 29-ல் தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் இருந்து பீகாரருக்கு கலப்பட மதுபானம் கடத்திவந்த போது பிரதீப் யாதவ் மற்றும் ராஜ் டோமோலியா ஆகிய இருவரும் உஞ்ச் போலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர்.
இதையும் படிங்க: மகாகும்பமேளாவை கலக்கிய 16 வயது அழகு தேவதை மோனாலிசா: 10 நாளில், ரூ.10 கோடி சம்பாதித்தாரா? சுவாரசிய தகவல்கள்

ஆனால், போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய பிரதீப் யாதவ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்து வந்தார். மகா கும்பமேளாவில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பிரதீப் தற்போது வசமாக சிக்கியுள்ளார்.
இவர் உட்பட ஆல்வார் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மீது கலால் சட்டம், குண்டர் சட்டம் போன்ற பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதோஹி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிமன்யூ இந்த தகவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து.. மளமளவென பற்றிய தீயால் பல கூடாரங்கள் எரிந்து சாம்பல்..!