திருப்பதி அருகே உள்ள பூத்தலப்பட்டு - நாயுடு பேட்டை நெடுஞ்சாலை அருகே கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள், 2 ஆண்கள், ஒரு சிறுவன் உட்பட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை எடுத்ததுடன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில்.. உயிர் தப்பிய பயணிகள்.. சென்னையில் பரபரப்பு..!

இதையும் படிங்க: கடலூரில் பயங்கரம்; பைக்கில் சென்றவருக்கு இப்படியொரு நிலையா? அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்...!