காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: உயிரை உலுக்கும் பயம்... POJK முகாம் பயங்கரவாதிகளை திரும்ப அழைக்கும் பாகிஸ்தான்..!

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சோயிப் அக்தர், பாசித் அலி, லத்தீப் ஆகியோரின் யுடியூப் சேனலுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்த மூன்று கிரிக்கெட் வீரர்களின் சேனலும் இந்தியாவில் இனி எடுக்காது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராணுவத்துக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதாக கூறி பாகிஸ்தான் ஊடகங்களில் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்த நிலையில் தற்போது சோயிப் அக்தர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் யூடியூப் சேனலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சோயிப் அக்தருக்கு இந்தியா அளவில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனை பயன்படுத்திக் கொண்டு அவர் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக தினமும் தனது கருத்தை வீடியோவாக வெளியிட்டு வந்தார். தற்போது இந்த சேனல் தடை விதிக்கப்பட்டிருப்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஷாகித் ஆப்ரிடி, டேனிஸ் கனரியா மற்றும் சல்மான் பட் போன்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் யூடியூப் சேனல் தொடர்ந்து இயங்குகிறது. இதனால் இந்த மூன்று வீரர்களின் சேனல் எதற்காக தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைதியை விரும்பும் பாக்,.. சொந்த மக்களைக் கொல்லும் இந்தியா.. அப்ரிடியின் அபத்த வீடியோ..!