பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் உள்துறை (நகர்ப்புற) இணையமைச்சர் யோகேஷ் கதம் தாக்குதலுக்கான காரணத்தை விளக்கினார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பாதாள உலகக் கும்பல் இருந்ததா என்று கேட்டபோது? ''பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்குப் பின்னால் எந்த பாதாள உலகக் கும்பலும் இல்லை.சைஃப் அலி கான் எந்தவிதமான அச்சுறுத்தல் குறித்தும் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு கூட கேட்கவில்லை. சைஃப் அலி கான் தனது மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தாக்கப்பட்டதற்கு திருட்டு மட்டுமே காரணம். வேறு எந்த கோணமும் இல்லை.

மும்பை காவல்துறை சிசிடிவி கேமராவில் காணப்பட்ட நபருடன் பொருந்தக்கூடிய முகபாவனைகளைக் கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்'' என விளக்கமளித்தார்.
நடிகர் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் குறித்து மகாராஷ்டிராவின் மற்றொரு அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ''இந்த விஷயத்தில் மாநில அரசும் காவல் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளன. நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் மும்பையும் ஒன்று. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மும்பை பாதுகாப்பான நகரம் அல்ல என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. உள்துறையையும் வைத்திருக்கும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிவிட்டார்'' என்பதெல்லாம் எதிர்கட்சிகளின் வீண் பேச்சு'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 நாட்களில், தலை வழுக்கையாகும் "டக்ளா வைரஸ்"பரவுகிறது : மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி

வியாழக்கிழமை காலை பாந்த்ராவில் உள்ள அவரது 12வது மாடி குடியிருப்பில் ஒருவரால் சைஃப் அலி கான் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார், இதனால் அவர் படுகாயமடைந்தார். சைஃப் அலிகான் கழுத்து உட்பட பல இடங்களில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அவருக்கு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு 'அடுத்த அடி' : டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி ஆதரவு; தனித்து களம் காண்கிறார், மாயாவதி