பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், ஆகியவற்றுக்கு எதிராகவும், அவதூறு பரப்பும் வகையில் வெளியான கருத்துக்களை நீக்கக் கோரி கடந்த ஆண்டு மத்திய அரசு எஸ்க் (ட்விட்டர்) தளத்துக்கு அதிகமான அளவு நோட்டீஸை அனுப்பியது தெரியவந்துள்ளது. எக்ஸ் தளத்துக்கு 66 நோட்டீஸ்களில் மூன்றில் ஒரு பங்கு நோட்டீஸ் அவதூறு கருத்துக்களை நீக்க மட்டுமே மத்திய அரசு அனுப்பியது தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, அவரின் மகன் ஜெய் ஷா, மத்திய உள்துறை இணைஅமைச்சர் பந்தி சஞ்சய் குமார், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைக் குறிவைத்து அதிகளவு அவதூறு கருத்துக்கள், மீம்ஸ்கள், தவறான செய்திகள் வெளிவந்தன என்று டெல்லி உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து தகவல்களைப் பெற்று தி இந்து (ஆங்கிலம்) ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: நேருவின் சாதனையை மோடி முறியடிப்பார்! ராம்தாஸ் அத்வாலே போட்ட கணக்கு…
கடந்த ஆண்டு மட்டும் சமூக ஊடகங்களான எக்ஸ், ஃபேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்குக்கு மட்டும் 1.10 லட்சம் சட்டவிரோத, உண்மைக்கு புறம்பான கருத்துருக்களை நீக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் டீப்ஃபேக், குழந்தைகள் பாலியல், நிதி மோசடி, தகவறான தகவல்கள் ஆகியவைஅதிகம் இருந்தன. அது மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், செய்திகள், தனிநபர்கள் குறித்த தகவல்களும் நீக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்தன.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து தவறான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதிலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஜெய் ஷாவையும் இணைத்து தவறான தகவல்கள் வெளியாகியிருந்தன.
சமூக ஊடகங்களில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான விஷயங்களைப் பரப்புவது, தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் முக்கிய தலைவர்கள் மற்றும் விஐபிக்களை அவமதிக்க பிரச்சாரம் செய்யப்படும் முயற்சியாகத் தெரிகிறது. இரண்டு பதிவுகளில் ஒன்று உண்மை கண்டறியும் சோதனையில் நீக்கப்பட்டது மற்றொர பதிவை பயனரே நீக்கினார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா, இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியதாக 54 வீடியோக்கள், பதிவுகள் எக்ஸ் தளத்தில் வலம் வந்தன. இதைக் கண்டுபிடித்து நீக்க கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பிரதமர் மோடி குறித்த ஒரு வீடியோவில் அவர் பேசுவது போன்று இருந்தது. அதில் அவர் பேசுகையில் “ ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் ஒரு கணக்கைக் கொடுப்போம்” என்று மக்களை ஏளனம் செய்யும் விதிதில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதையும் மத்திய அ ரசு நீக்கியது.
இந்நிலையில் மத்திய அரசு உருவாக்கிய சாயோக் போர்ட்டலில் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எக்ஸ் தளம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த போர்டல் “தணிக்கை செய்யும் போர்டல்” என்று எக்ஸ் தளம் விமர்சித்துள்ளது. இந்த சகாய் போர்டலில் இணைந்தால் போலீஸார் அரசு நிறுவனங்கள், அமலாக்கப்பிரிவு ஆகியோர் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்புவார்கள், சட்டரீதியான பாதுகாப்பு இருக்காது எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி ‘ரொம்ப ஸ்மார்ட்’..! பரஸ்பர வரி சிறப்பாக செயல்படும்: அதிபர் ட்ரம்ப் புகழாரம்..!