இவ்வளவு சேமிப்பா! வருமானவரி உச்சவரம்பு உயர்வால் எவ்வளவு பணம் மிச்சமாகும் தெரியுமா?
2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதால் நடுத்தரக் குடும்பத்தினர், மாத ஊதியம் பெறுவோர் சேமிக்கும் தொகை இனி அதிகமாக இருக்கும்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் வருமானவரி வீதம், வரிச் சலுகை குறித்து தனது அறிவிப்பில் ஆண்டுக்கு ரூ.12லட்சம் வருமானம் ஈட்டுவோர் ஒரு ரூபாய்கூட வருமானவரி செலுத்தத் தேவையில்லை, வருமானவரி விலக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, பல்வேறு படிநிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதன்படி முந்தைய வரிமுறையில் ஆண்டுக்கு ரூ.3 லட்சம்வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்தத் தேவையில்லை என்று இருந்தநிலையில் அது ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக 25% வரி கொண்டுவரப்பட்டு, ஒட்டுமொத்த வரிபடிநிலை 7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திருத்தப்பட்ட வரிவீதம் மூலம் நடுத்தரக் குடும்பத்தினர் குறைந்தபட்சம மாதத்துக்கு ரூ.9,500 வீதம் ஆண்டுக்கு ரூ.80ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சேமிக்க முடியும்
பேங்பஜாக் நிறுவனத்தின் சிஇஓ அதில் ஷெட்டி கூறுகையில் “ ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் ஒருவர் வருமானவரியாக ரூ.3.43 லட்சம் செலுத்த வேண்டும், இதில் நிலையான கழிவாக ரூ.75ஆயிரம் இருக்கிறது. முந்தைய வரி முறையில் ரூ.4.57 லட்சம் வரி செலுத்திய நிலையில் ஏறக்குறைய ரூ.80ஆயிரம் குறைகிறது. மாதத்துக்கு ரூ9500 வீதம் சேமிக்க முடியும்.

ஆண்டுக்கு ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது, முன்பு ரூ.15 லட்சமாக இருந்தது, இது ஏறக்குறைய 60 சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.
உதாரணமாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டும் ஒருவர் வரி செலுத்தத் தேவையில்லை. ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ரூ.1.10 லட்சம் வரை புதிய வரி விதிப்பு மூலம் சேமிக்கலாம். இந்த புதிய வரியால் மத்திய அரசுக்கு நேரடிவரி வருவாய் மூலம் ரூ.ஒரு லட்சம் கோடியும், மறைமுக வரியால் ரூ.2,600 கோடியும் இழப்பு ஏற்படும்.
புதிய வருமானவரி முறை(2025-26)
ஆண்டுக்கு ரூ.4 லட்சம்வரை வரியில்லை
ரூ.4 லட்சம் முதல் 8 லட்சம் வரை- 5 சதவீதம்
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை- 10 சதவீதம்
ரூ.12 லட்சம் முதல் ரூ.16லட்சம் வரை- 15 சதவீதம்
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம்: 25 சதவீதம்
ரூ.24 லட்சத்துக்கு மேல் – 30 சதவீதம் வரி
இதையும் படிங்க: விலை குறைகிறது கேன்சர் நோய் மருந்து..! சுங்கவரி முழுதும் ரத்து..! பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
இதையும் படிங்க: வீட்டு உரிமையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. நோட் பண்ணுங்க.!