இந்தியா திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன். அசாத்திய நடிப்பு திறமையால் நாடு முழுக்க ரசிகர்களை கொண்ட அமிதாப் பச்சன் அதிக வரி செலுத்தும் இந்திய பிரபலம் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

கடந்த 1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய அமிதாப் பச்சன், 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். 82 வயதிலும், பல திரைப்படங்களில் நடித்து, பிரபலமான பிராண்டு விளம்பரங்களிலும் பணியாற்றுகிறார். சமீபத்தில் அமிதாப் பச்சன் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மூத்த சட்டத்துறை அலுவலர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய தலைவராக நடித்து இருந்தார்.
இதையும் படிங்க: ‘150 நாள், சம்பளத்தை ரூ.400ஆக உயர்த்துங்கள்’.. சோனியா காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கை..!

அமிதாப் பச்சன் நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல்வாதி என அனைத்திலும் தனது தனித்திறமையை காண்பித்து வந்தார், அதனால் அவரை அங்கீகரிக்கும் விதமாக பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது. கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கி தில்லி பல்கலைக்கழகம் சிறப்பித்தது.
தற்போது, கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் மூலம் உறுதியான வருமானம் பெற்று வரும் அமிதாப் பச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2737 கோடி என கூறப்படுகிறது. அவரிடம் ரூ.54.77 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ. 7.66 கோடி மதிப்புள்ள 16 வாகனங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 120 கோடி வரி செலுத்தியுள்ளார். 2024-25 நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இதற்காக இவர் ரூ.120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்தும் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமிதாப் பச்சன் வரிசையில், நடிகர் ஷாரூக் கான், சல்மான் மற்றும் விஜய் ஆகியோர் அதிக வரி செலுத்தும் பிரபலங்களாக உள்ளனர். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் ரூ. 92 கோடி வரி செலுத்திய ஷாரூக் கான் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் சீனர்கள் நடத்திய போலி கால் சென்டர்... ரெய்டின்போது உள்ளே புகுந்து மக்கள் வைத்த ட்விஸ்ட்..!