ஆந்திரப் பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சலுகை விலையில் நிலம் பெற வேண்டுமானால் ஏக்கர் ஒன்றுக்கு 500 பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கையை ஆந்திரப் பிரதேச அரசு கொண்டு வந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
எங்களுக்கு மாற்றத்துக்கான காரணி தேவை. ஆதலால் எங்கள் மாநிலத்தின் ஐடி துறை வளர்ச்சியில் டிசிஎஸ் நிறுவனம் காரணியாக இருக்கும் என்று நம்பினோம். அதனால்தான் விசாகப்பட்டிணத்தில் ஐடி நிறுவனங்களை தொடங்கவரும் நிறுவனங்களுக்கு சலுகைகளும், சில நிபந்தனைகளும் விதித்தோம். விசாகப்பட்டினத்தில் அதிகமான ஐடி நிறுவனங்கள் வந்து கிளைகளை அமைக்க ஊக்குவிப்போம், அவர்களுக்கும் சாதகமான விதிமுறைகளை வழங்குவோம். எங்களைப் பொருத்தவரை புதிய வேலைவாய்புகளை மாநிலத்தில் உருவாக்க வேண்டும்.
இதையும் படிங்க: கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு குறிவைத்த ஆர்எஸ்எஸ்..! ராகுல் காந்தி விமர்சனத்தால் பின்வாங்கியது..!

ஆந்திரப் பிரதேசத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மக்களிடம் வாக்குறுதியளித்துள்ளோம். இது அரசு துறை மற்றும் தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இருக்கும். மாநிலத்தில் முதலீட்டை ஈர்ப்பதற்காக எந்த விதமான சலுகைகளையும் அறிவிப்போம்.
டிசிஎஸ் நிறுவனத்துக்கு 21.16 ஏக்கர் நிலத்தை 99பைசாவுக்கு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்துக்கு ரூ.1370 கோடி கிடைக்கும், 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். டிசிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து பல நிறுவனங்களும் ஐடி கிளைகளைத் தொடங்க முன்வருவார்கள், அவர்களுக்கு சலுகை விலையில் நிலத்தை வழங்கி, வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.

கடந்த 1990களில் ஆந்திரப்பிரதேசத்தில் இதுபோன்றுதான் ஐடி நிறுவனங்களை கொண்டு வர முடிந்தது. மைக்ரோசாப்ட் முதல் கூகுள் நிறுவனங்கள்வரை ஆந்திராவில் கிளைகளை அமைத்துள்ளன. இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஆந்திராவில் கிளையை அமைத்துள்ளது. நாங்கள் அறிவித்துள்ள ஊக்கத் திட்டம் நிச்சயமாக மாநிலத்தில் பெரிய அளவுக்கு முதலீட்டை ஈர்த்துக்கொடுக்கும். அனந்தபூர் மாவட்டதுக்கு பெரிய அளவில் முதலீட்டையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என நம்புவோம்.

மக்களின் வாழ்த்தைத் தரம், தனிநபர் வருவாய் உயரும். எங்கள் திட்டப்படி ஒரு ஏக்கர் நிலத்தை சலுகை விலையில் ஐடி நிறுவனங்களுக்கு வழங்கினால் ஏக்கருக்கு 500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தத் திட்டத்தை விரைவில் அறிவிப்போம். ஆந்திர அரசு முதலீட்டாளர்களுக்கு நண்பனாக, ஐடி நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக இருக்கும்”
இவ்வாறு நாரா லோகேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீணான அமெரிக்காவின் முயற்சி... கடைசியில் இந்தியாவிடம் மண்டியிட்ட சீனா..!