வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, காலியாக இருக்கும் இடங்களில் போதுமான ஊழியர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு 48மணிநேரம் தொடர்வேலைப் நிறுத்தப் போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.
9 வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த அமைப்பான வங்கி யூனியந் ஐக்கிய கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் காலியாக இருக்கும் அதிகாரிகள் அளவிலான காலியிடங்கள், கிளார்க் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இது குறித்து வங்கி யூனியன் ஐக்கிய கூட்டமைப்பு(யுஎப்பியூ) வெளியிட்ட அறிக்கையில் “ எங்களின் தீவிரமான ஆலோசனை, தீர்மானத்துக்குப்பின், தேசிய அளவில் 48மணிநேர வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதன்படி, மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறோம். இந்த இரு நாட்களில் வங்கி தொடர்பான எந்த சேவையும் கிடைக்காது” எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் 31 முதல்வர்களில் 14 பேர் பாஜக..! கூடும் காவி கணக்கு
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் மத்திய நிதிச் சேவைத்துறை பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டது.அதாவது, ஊழியர்களின் வேலை செயல்பாட்டுக்கு ஏற்ப ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விதிகளை வெளியிட்டது. இது ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழலை உருவாக்கும் என, ஊழியர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்று வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

பொதுத்துறை வங்கிகளை மேலாண்மை செய்வது என்பது அந்தந்த வாரியத்துக்கு உட்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஊழியர்கள் ஓய்வுகாலம் முடியும் போது வழங்கப்படும் பணிக்கொடை ரூ.25 லட்சம் என்ற உச்சவரம்பை நீக்க வேண்டும், வருமானவரிச் சலுகை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடக்க உள்ளது.
அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களுக்கான தேசிய கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவைவேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
இதையும் படிங்க: மவுனத்தில் மத்திய அரசு! ஈரானின் சபஹார் துறைமுகத்து அளித்த விலக்குகளை ரத்து செய்ய அதிபர் ட்ரம்ப் உத்தரவு