ஈரானின் சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சிக்கும் முதலீட்டுக்கும் உதவும் நாடுகள் மீது தடை விதிக்க அனுமதியளித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஈரான் சபஹார் துறைமுகத்தில் அதிகமாக இந்திய அரசு முதலீடு செய்துள்ளநிலையில் அதிபர் ட்ரம்ப் உத்தரவு குறித்து எந்த எதிர்விணையாற்றாமல் மவுனமாக இருக்கிறது.
அமெரிக்க அரசு “ தேசிய பாதுகாப்பு அதிபரின் ஆணை” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுல்ளது. அதில் “ ஈரான் அரசு மீது அதிகபட்சமான பொருளாதார அழுத்தத்தை தர வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மற்றும் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஈரானுக்கு நிதியுதவியாக வரக்கூடிய வழிகளை தடுக்க வேண்டும், குறிப்பாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி, துறைமுகம், துணை வர்த்தகங்கள் ஆகியவற்றை முடக்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என்னை கொல்ல நினைத்தால்.... ஈரானை மொத்தமாக அழித்து விடுவேன்..! டிரம்ப் ஆவேசம்

அது மட்டுமல்லாமல் ஈரான் அரசுக்கு எந்தவகையிலான பொருளாதார மற்றும் நிதிரீதியான உதவிகளை வழங்கும் நாடுகளுக்கு எதிராக தடைவிதிப்பது, விலக்குகள் அளித்திருந்தால் அதை மாற்றுவது, ரத்து செய்வது போன்ற அதிகாரிகள் வெளியுறவுத்துறைக்கு வழங்கப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2016ம் ஆண்டிலிருந்து ஈரானின் சபஹார் துறைமுகத்தை இந்திய அரசு மேம்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதநேய உதவிகள், உணவுப்பொருட்கள், உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல முடியாது என்பதால் ஈரான் வழியாகக் கொண்டு செல்ல 3 நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
இப்போது ஈரானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நாடுகள், நிதியுதவி செய்யும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என அமெரிக்க அரசு உத்தரவிட்டிருப்பதால் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்னசெய்வதென்று தெரியாமல் திணறுகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து இதுவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறது. பிரதமர் மோடி வரும் 12ம் தேதி அமெரிக்கா செல்லும்போது, இந்த சபஹார் துறைமுக விவகாரம் குறித்து அதிபர் ட்ரம்ப்புடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

அதிபர் ட்ரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோது, ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் பலவிதமான பொருளாதாரத்த டைகளையும் விதித்தார். ஆனால், சபஹர் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்யவும், மேம்படுத்தவும் மட்டும் விலக்குகளை அதிபர் ட்ரம்ப் வழங்கினார்.
ஏனென்றால், ஆப்கானிஸ்தானின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் உதவுவதால், இந்தியா சபஹர் துறைமுக மேம்பாட்டுக்கு மட்டும் தடைவிதிக்கவில்லை. ஈரானில் இருந்து மலிவான கச்சா எண்ணெயையும்இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால் தற்போது அதிபர் ட்ரம்பின் உத்தரவு, இந்தியாவின் நிலைப்பாட்டில் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகை எடுக்கும் ஒப்பந்தத்திலும் இந்தியா-ஈரான் நாடுகள் கையொப்பமிட்டன. இந்த துறைமுகத்தின் மூலம் வடக்கு-தெற்கு வர்த்தகமுனையத்துக்கும், ரஷியா-மத்திய ஆசியாவுக்கு செல்லவும் எளிதாக இருந்தது. ஆனால் ட்ரம்பின் இந்த உத்தரவு இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை தரலாம் என்றாலும் இதுவரை மத்திய அரசு மவுனம் காப்பது ஏன் எனத் தெரியவில்லை.
இதையும் படிங்க: சிறு நீரில் குளியல்... ஷாக் ட்ரீட்மெண்ட்.. சித்திரவதை... ஆன்மாவை உலுக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பியவரின் கதை..!