மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் பாஜகவினர், தாய்மொழி தமிழிலேயே பிழையாக கொண்டு வந்த பதாகைகளை பார்த்து மக்கள் சிரித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கிட வலியுறுத்தி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்களை இழிவாக பேசியதாகவும், இந்து மதத்தை இழிவுப்படுத்தியும் பேசியதாக கூறி கோஷங்களை எழுப்பிய மகளிர் பிரிவினர் ஊர்வலமாக வந்து பொன்முடியின் உருவப்படத்தை செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

பொன்முடியின் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தினர். இந்த ஆர்ப்பாட்டதிற்காக பாஜகவினர் கொண்டு வந்த பதாகைகளில் தமிழில் எழுத்துப்பிழைகள் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகியது. "பொண்முடியே", "ராஜநாமா", "ஆர்பாட்டம்" என எழுத்துப்பிழைகளுடன் பதாகைகளை ஏந்தியபடி பாஜகவினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: திமுக அரசின் மீது அமைச்சர்களுக்கே அதிருப்தி.. வானதி சீனிவாசன் பரபரப்புக் குற்றச்சாட்டு.!!
மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் பாஜகவினர், தாய்மொழி தமிழிலேயே பிழையாக பதாகைகள் கொண்டு வந்தது பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தியை திணிக்கும் பாஜகவினர் தாய்மொழியை கூட முறையாக படிக்கவில்லையா என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பட்டியல் மாற்றத்தில் அரசியல் மோசடி; மக்களை இனி ஏமாற்ற விடமாட்டோம்.. பாஜக-வை எச்சரித்த கிருஷ்ணசாமி!!