காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.
இந்த மோசமான சம்பவத்தில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த என்ஏஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அங்குத் துப்பாக்கிச் சூட்டை பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையின் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் போட்டோ மற்றும் வரைபடம் நேற்று வெளியிடப்பட்டது.

இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அமெரிக்காவின் சிஐஏ அமைப்பின் டாக்குமெண்ட் இணையத்தில் பரவி வருகிறது. 1993-ல் தயாரிக்கப்பட்ட இந்த டாக்குமெண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளின் ராணுவ வலிமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சிஐஏ தனது மதிப்பீடுகளை செய்துள்ளது. இரு நாடுகளும் முழு வீச்சில் போரை ஆரம்பிக்க 20% மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என்ற போதிலும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தால் நிலைமை சீக்கிரம் மாறிவிடும் என அப்போதே சிஐஏ தனது டாக்குமெண்டில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1990களில் போருக்கான வாய்ப்புகள்" என்ற தலைப்பில் இந்த டாக்குமெண்ட் தயாரிக்கப்பட்டது. அதில் போரைத் தொடங்க இந்தியாவுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீருக்கு யாரும் போக வேண்டாம்.. தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!!

இந்த சிஐஏ 1993ல் தயார் செய்த டாக்குமெண்ட் இதுவரை வெளியாகமல் இருந்தது. மேலும் இது அந்நாட்டின் அதிபர் உள்ளிட்ட சிலர் மட்டுமே அணுகக்கூடியதாக இருந்தது. மிகச் சமீபத்தில் தான் இந்த டாக்குமெண்டுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. அதில், இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் அது பாகிஸ்தானுக்குப் பேரழிவு. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக அழிக்கும்.
ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் கூட ஆபத்து. மறுபுறம் போர் ஏற்பட்டால் அது பாகிஸ்தானுக்குப் பேரழிவைத் தரும் என்றும் அந்நாட்டின் ராணுவம் அழியும் அல்லது அரசே மொத்தமாக வீழவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய போர்களிலும் கூட இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியையே தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. சிஐஏவின் இந்த டாக்குமெண்டில் அணு ஆயுதங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே பார்க்கும்போது சந்தேகமே இல்லாமல் இந்தியா தான் வலிமையான நாடாக இருக்கிறது. இதனால் போர் ஏற்படும்போது தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் சமாளிக்கவும் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அதில், இந்திய ராணுவத்தின் விரைவான முன்னேற்றங்கள் பாகிஸ்தானின் திறனைக் குறைக்கும். இந்தியாவின் ராணுவம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
அவர்கள் பிரச்சினையைச் சமாளிக்க அணு ஆயுதங்களையே நம்பி இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா பாகிஸ்தான் இடையே பார்க்கும்போது இந்திய ராணுவமே வலிமையானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவல் பாதைகளை மூட இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை எடுக்கும் என்றும் 1993ல் தயாரிக்கப்பட்ட அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய விசா கொள்கை அறிமுகம்; இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க விசா கிடைக்காது