இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சகம் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்-பாஸ் முறையை ரத்து செய்யப்படுவதாகவும் , 5, 8ம் வகுப்புகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் துணைத் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் துணைத் தேர்விலும் தோல்வி அடைந்தால் அதே வகுப்பில் தொடர வேண்டும் என்றும் மத்தியகல்வி அமைச்சகத்தின் அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஆல்-பாஸ் முறையை ரத்து செய்யப்படக்கூடாது என ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்திவந்தநிலையில் 5, 8ம் வகுப்புக்கு ஆல்-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதால் இடைநிற்றல் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி .. சசிகலா சபதம் ..!