பிரியங்காவின் கன்னத்தை உவமைப்படுத்தி கவர்ச்சியாக விமர்சித்த அவர், தற்போது "டெல்லி முதல் அமைச்சர் அதிஷி தனது தந்தையை மாற்றிக் கொண்டவர்" என்று பேசியது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜகவினரின் வெட்கக்கேடு எல்லைகளை தாண்டி விட்டதாக" பதிலடி கொடுத்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில், அடுத்த மாதம் (பிப்ரவரி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரான அதிஷியை எதிர்த்து, பாஜக தலைவர்களில் ஒருவரான ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அவர் சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் ஆபாசமாக பேசி வருகிறார்.
"காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பளபளப்பான கன்னங்களைப் போல்" தனது தொகுதியில் சாலை அமைப்பேன் என்று கவர்ச்சியாக அவர் பேசியது கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டது.

அதன் தாக்கம் குறைவதற்கு முன்பாக, "டெல்லி முதல் அமைச்சர் அதிஷி தனது தந்தையை மாற்றிக் கொண்டார்" என கூறி 'எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி' இருக்கிறார். டெல்லி ரோகினி பகுதியில் நடைபெற்ற பாஜக 'பரிவர்த்தன் பேரணி'யில் பேசிய அவர், அதிஷி தன்னுடைய குடும்பப் (தந்தை) பெயரான 'மர்லினா' என்பதிலிருந்து 'சிங்' என மாற்றிக் கொண்டதாக கூறினார்.
இதையும் படிங்க: பிரியங்காவின் கன்னங்களைப் போன்ற பளபளப்பான சாலை: டெல்லி பாஜக வேட்பாளரின் 'கவர்ச்சி' வாக்குறுதியால் சர்ச்சை ; காங்கிரஸ் பதிலடி
"இந்த மர்லீனா (அதிஷி முதலில் பயன்படுத்திய குடும்பப் பெயர்) இப்போது சிங் ஆக மாறிவிட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் காங்கிரஸுடன் சேர மாட்டேன் என்று தனது குழந்தையின் பெயரில் சத்தியம் செய்திருந்தார். இதுதான் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் நடத்தை" என்றும் ரமேஷ் பிதுரி கூறியிருந்தார்.
டெல்லி பெண்கள்
பழிவாங்குவார்கள்
இந்தப் பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். "வெட்கக்கேட்டின் அனைத்து எல்லைகளையும் பாஜக தலைவர்கள் மீறிவிட்டனர். டெல்லி முதல்வர் அதிஷி ஜி பற்றி மிகவும் அபத்தமான முறையில் அவதூறு செய்து வருகிறார்கள்" என கெஜ்ரிவால் அப்போது சாடினார்.
அவர் மேலும் கூறுகையில் "பெண் முதல் அமைச்சரை இப்படி மட்ட ரகமாக விமர்சித்து இருப்பதை டெல்லி பெண்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இதற்காக வருகிற தேர்தலில் நிச்சயம் அவர்கள் பாஜகவை பழி தீர்த்துக் கொள்வார்கள்" என்றார்.
ஹே மாலினி
பிரியங்கா காந்தியை கவர்ச்சியான முறையில் விமர்சித்தது குறித்து பதில் அளித்த ரமேஷ் பிதுரி, ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் நடிகை ஹேமமாலினியை இதுபோன்று விமர்சித்ததை சுட்டிக்காட்டி, லாலு மன்னிப்பு கேட்டால் நாங்களும் மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி இருந்தார்.

பிரியங்கா, ஹேமமாலினி ஆகியோரை தொடர்ந்து தக்ஷதற்போது டெல்லி பெண் முதல்வரை பற்றியும் மீண்டும் தரக்குறைவாக அவர் பேசி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மன்னிப்பு கேட்டார்
முன்னதாக பிரியங்காவை பற்றி தரக்குறைவான முறையில் பேசிய பேச்சுக்கு கடுமையான கண்டனம் எழுந்ததும், ரமேஷ் பிதுரி
காங்கிரசாரிடம் மன்னிப்பு கேட்டார்.
தான் அது போன்ற எந்த ஒரு நோக்கத்திலும் பேசவில்லை என்றும், தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டு விட்டதாகவும் கூறி, அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக, தனது சமூக வலைத்தள பதிவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
வாக்காளர்களை திசை திருப்ப
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆழமாக கால் ஊன்றி இருப்பதை தொடர்ந்து அந்தக் கட்சியின் செல்வாக்கை சீர்குலைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது போன்ற பிரச்சாரங்களுக்கு கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
கெஜ்ரிவாலின் ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் பாஜகவை "மாப்பிள்ளை இல்லாத ஜனவாச குதிரை" என்று சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு பாஜக வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். அதாவது பாஜகவில் முதல்வர் வேட்பாளர் என்று யாருமே இல்லை என்று கிண்டல் செய்யும் விதத்தில் இந்த பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

aravinஇந்த நிலையில், வாக்காளர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற அரசியலுக்கு தொடர்பில்லாத விஷயங்களை பேசி மக்களின்
ஜ்ஜிகவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி அவர்கள் நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதும் பர்வேஷ் வர்மா: ஆம் ஆத்மியை முந்திய பாஜக... வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!