சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலிலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில், டெல்லியில் ஓடும் யமுனை நதியை சுத்தப்படுத்துவோம் என்று பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தங்களுடைய இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், டெல்லியின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு துறை அமைச்சர் பர்வேஸ் வர்மா படகில் சென்றபடி யமுனை நதியை ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறுகையில், "கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லியில் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது நதியும் வெள்ளை பாதை அடைப்புகளும் துப்புரவு செய்யப்பட்டு இருப்பதால் எதிர்காலத்தில் வெள்ளச் சேதம் தவிர்க்கப்படும்.
இதையும் படிங்க: எக்ஸ்டிரா வேலை வாங்கிய பாஸ்...கடுப்பான ஊழியருக்கு செய்த தரமான சம்பவம்!!
கடந்த பத்து நாட்களில் மட்டும் யமுனை நதியிலிருந்து 1,300 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. ஆற்றில் கழிவுகளை வெளியேற்றும் 18 முக்கிய வடிவால் பகுதிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட இருக்கின்றன.
இதன் மூலம் யமுனை நதி மாசடைவதில் இருந்து முழுமையாக மீட்கப்படும்" என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "யமுனை நதிக்கரையை சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாக மாற்றும் வகையில் டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம்.

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது கடந்த 10 ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வதற்கு குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. காகித அளவில் கூட அது பற்றிய திட்டம் எதையும் அவர்கள் தயாரிக்கவில்லை.
யமுனை நதியை சுத்தம் செய்வதற்காக உழைக்க வேண்டும் என்று முந்தைய அரசு ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் இப்போது டெல்லி அரசு மட்டுமல்ல, பிரதமர் அலுவலகமும் இதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லியை கையில் எடுத்த அமித்ஷா..! கிரிமினல்களை தெறிக்கவிட முடிவு..!