கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள கூத்து பரம்பா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 24 வயதான இவர், 'அனோரெக்ஸியா' உணவுக் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். பொதுவாக இந்த உணவுக் கோளாறால் பாதிக்கப்படுவோர், எடை குறைவாக இருந்தாலும், எடை அதிகரிக்கும் என்ற தீவிர பயத்தால், உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீநந்தா, கடந்த ஆறு மாதங்களாக உணவு எதையும் சாப்பிடவில்லை என தெரிகிறது. யூடியூபை பார்த்து உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்றி வந்த இவர், வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர்நாடகம், கேரளம் செய்வதை உங்களால் செய்ய முடியாதா..? முதல்வர் ஸ்டாலினை குடையும் அன்புமணி ராமதாஸ்.!

பின்னர், உடல் மெலிந்த நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சில மாதங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நன்றாக சாப்பிடும்படியும், மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளனர்.

எனினும், அவர் உணவு எதையும் சாப்பிடாமல் இருந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவின் சர்க்கரை அளவு குறைந்து, சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தலசேரி கூட்டுறவு மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர்.
அப்போது, அவரது உடல் எடை, 24 கிலோவுக்கும் குறைவாகவே இருந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா, உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுங்க... முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி..!