மத்திய அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் திமுக இளைஞரணி சார்பில் மத்திய இக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார். "பாஜகவுக்கு திமுக எதிரியே கிடையாது. ஏனென்றால், தமிழகத்தில் பாஜக உயிரோடு இல்லை; பாஜக இருப்பதை போல் காட்டிக் கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து தலைவர்கள் பலர் தனக்கு எழுதும் கடிதத்தில் தமிழில் கையெழுத்திடுவது இல்லை என பிரதமர் மோடி கூறியிருக்கிறார். முதலில் அவர் தனது தாய் மொழியில் பேசட்டும்.

தாமரை தண்ணீரில் மட்டுமே மலரக் கூடிய குணம் கொண்டது. தாமரை முளைக்கும், தாமரை மலரும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் தாமரை மலராது. ஏனென்றால் ஏற்கெனவே இங்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஆனால், தாமரை இலை மேல் தண்ணீர் ஊற்றினால் அந்த இலை தண்ணீரை நிராகரித்து விடும். பாஜக அரசியல் செய்து அதிமுகவை நான்காக பிரித்துவிட்டது.
எடப்பாடி பழனிசாமியைச் சரியாக அடையாளம் காணாமல், அவரை சசிகலா முதல்வர் ஆக்கினார். ஆனால், சசிகலாவுக்கு பழனிசாமி விசுவாசமாக இல்லை. சிறைக்கு சென்ற அவரை சித்ரவதை செய்தார். தன்னை உருவாக்கிய சசிகலாவின் அரசியல் வாழக்கையைப் பழனிசாமி முடித்துவிட்டார்” என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.
இதையும் படிங்க: தமிழகத்தைத் தவிர்த்தால் தமிழகத்தில் இடமே இல்லை.. பிரதமர் மோடியை எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்!