பிப்ரவரி மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் பல புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இது நுகர்வோருக்கு ஒருபகுதி நிம்மதியையும், சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
பிப்ரவரி 1ம் தேதியான இன்று மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 8-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார். இதைக் கடந்து யுபிஐ விதிகல், வர்த்தக சமையல் சிலிண்டர் விலை குறைப்பு, ஆர்பிஐ நிதிக்கொள்கை, கோடக்மகிந்திரா வங்கி, ஐடிஎப்சி வங்கிகளின் புதிய விதிகள் இந்த மாதத்தில் அமலாகின்றன.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு
யுபிஐ பரிவர்த்தனைகளில் ஐடி கண்டிப்பாக ஆங்கில எழுத்துக்களும், எண்களும் மட்டுமே இருக்க வேண்டும் என தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இந்த விதி பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அவ்வாறு சிறப்பு குறியீடுகளுடன் பரிவர்த்தனை ஐடி இருந்தால், பரிவர்த்தனை நிராகரிக்கப்படும்.
இதையும் படிங்க: பிப்ரவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை - முழு லிஸ்ட் இதோ!
வர்த்தக சிலிண்டர் விலை குறைப்பு
எண்ணெய் நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தின் முதல்தேதியான இன்று வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளன. 19கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்பையடுத்து டெல்லியில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1791 ஆக குறைந்துள்ளது. இந்த விலைக் குறைப்பு குறைவுதான், ஆனால் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்களுக்கு இது சற்று நிம்மதியைத் தரும்.

ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டம்
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது. ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் பணப்புழக்கம் கடுமையாகக் குறைந்துள்ள நிலையில் வட்டிக் குறைப்பு குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. ரெப்போ ரேட்டில் எந்த மாற்றம் செய்தாலும், அது கடன் வழங்குதல், டெபாசிட் ரேட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
கோடக் மகிந்திரா வங்கியின் அறிவிப்பு
கோடக் மகிந்திரா வங்கியின் வாடிக்கையாளர்கல் முதல்முறையாக தங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கட்டணமில்லமால் பணம் எடுக்கலாம். அதன்பின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர பேலண்ஸ் ஸ்டேட்மெண்ட், ரகசிய பின் மாற்றுதல் ஆகியவற்றுக்கு கட்டணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஎப்சி வங்கியின் விதிகள் மாற்றம்
ஐடிஎப்சி வங்கியின் கிரெட்டி கார்டு விதிகல் வரும் 20ம் தேதிமுதல் மாறுகின்றன. இதன்படி, கல்வி தொடர்பான கட்டணங்களை கிரெட், பேடிஎம், மொபிவிக் மூலம் செலுத்தினால் குறைந்தபட்சம் ரூ.249 கட்டணம் வசூலிக்கப்படும். நேரடியாககிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால் கட்டணம் இல்லை. ஆண்டுக் கட்டணமாக ரூ.499 மற்றும் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அனைத்து கிரெடிட் கார்டுகலுக்கும் மாற்றுக்கார்டு வழங்க ரூ199 கட்டணம், வரிகள் வசூலிக்கப்படும். தனிநபர் கார்டு வழங்க ரூ.499 கட்டணம், வரியுடன் வசூலிக்கப்படும்.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன்: 'பீகார் மதுபானி' சேலை அணிந்து, பட்ஜெட் தாக்கல்