சென்னையில் வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்லும் நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இப்படி நாய்களால் ஏற்படும் பிரச்சனைகள் சொல்லிக் கொண்டே போகலாம் .

எனவே, மாநில அரசின் நாய் வளர்ப்புக் கொள்கை பட்டியலில், தமிழ்நாட்டின் தட்பவெப்பச் சூழலுக்கு ஒத்துவராத 11 வகை வெளிநாட்டு நாய் இனங்களை வீட்டில் வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்து விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: நாய்களின் உடலில் மைக்ரோ சிப்... தீவிரம் காட்டும் மாநகராட்சி.. ஏன் தெரியுமா..?

இதனிடையே, வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும், ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும், கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை. இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்த நிலையில், மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்க்கவசம் அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதகாவும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும் எனவும் கூறினார். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து தெரிவிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாய்களின் உடலில் மைக்ரோ சிப்... தீவிரம் காட்டும் மாநகராட்சி.. ஏன் தெரியுமா..?