ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து டிடிவி தினகரனுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து தினகரன் நீக்கப்பட்டார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அப்போது அதிமுகவின் கொடியை போன்று கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களை கொண்ட கொடியையும், அதன் நடுவே ஜெயலலிதா புகைப்படத்தையும் பயன்படுத்தினார்.

எனவே அவருக்கு எதிராக சென்னை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.ஜெயலலிதாவின் பெயர், அவரது புகைப்படம், அதிமுகவின் கொடியில் உள்ளது போல் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் மற்றும் 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!

ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த வழக்கை திரும்ப பெறுவதாகவும், இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

பாஜக தலைமையிலான என்.டி. ஏ. கூட்டணியில் தற்போது அதிமுக இணைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூட்டணியால் அதிருப்தி..! அதிமுகவில் இருந்து விலகிய EX.MLA..!