வழக்கமாக நாளேடுகள், தொலைக்காட்சிகள், லிங்க்ட்இன் உள்ளிட்ட தளங்களில் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். ஆனால், எலான் மஸ்க் புதுவிதமாக தனது எக்ஸ் தளத்தின் வாயிலாக தனது புதிய திட்டத்துக்காக உலகளவில் மென்பொறியியல் வல்லுநர்கள், இளம் மென்பொறியாளர்கள் தன்னுடைய இணைந்து பணியாற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

எலான் மக்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில் “ நீங்கள் மென்பொருள் அல்லது ஹார்ட்கோர் பொறியாளராக இருந்தால், அனைத்தையும் ஒரே செயலில் கொண்டுவரும் விருப்பம் உள்ள பொறியாளராக இருந்தால், எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். உங்களின் சிறந்த பணியை code@x.com என்ற தளத்துக்கு அனுப்புங்கள்
எங்கள் எந்த பள்ளிக்கூடத்தில் படித்தீர்கள், அல்லது நீங்கள் பள்ளிக்கூடத்தில் படித்தீர்களா, எந்த பெரிய நிறுவனத்தில் பணியாற்றினீர்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப்படமாட்டோம்.
உங்களின் “கோட்” மட்டும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி எலான் மஸ்க் கேள்வி கேட்பதும், அதை கிண்டலடிப்பதும் முதல்முறை அல்ல. ஏற்கெனவே கல்வி முறை குறித்து கேள்வி எழுப்பிய மஸ்க், கல்விமுறை என்பது பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்பதாகவும், திறமையை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். தேர்வுகள், பரிசோதனைகள், மனப்பாடம் ஆகியவை தடை செய்யப்படவேண்டியது என்று மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பெஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்துக்கு மட்டும் மென்பொறியாளர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்த மஸ்க், இப்போது எக்ஸ் தளத்துக்கும் இளைஞர்களை தேர்ந்தெடுக்க உள்ளார்.
இதையும் படிங்க: தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் !

எக்ஸ் தளத்தை வேறுவிதமாக, உலகத்தின் பொதுத்தளமாக மாற்ற எலான் மஸ்க் தி்ட்டமிட்டு அதை தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அவர் அறிவித்திருக்கும் திட்டம் என்பது “அனைத்தும் ஒரே செயலி” என்ற திட்டத்தோடு களமிறங்கியுள்ளார். எலான் மஸ்கின் “எவ்ரிதிங் ஆப்”(Everything app) என்ற திட்டம் சீனாவின் வீசாட் போன்று இருக்கும் எனத் தெரிகிறது. இந்த வீசாட் வாயிலாக சாட் செய்யலாம், பொருட்களை, சேவைகளை வாங்கலாம், பேமெண்ட் செய்யலாம். ஆதலால் எக்ஸ் தளத்தை வழக்கமான சமூகவலைத்தளத்துக்கும் அப்பால், பொருட்கள், சேவைகள், பணம் செலுத்தும், பெறும் தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளியை மூடாதீங்க மா.. காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க MLA..