பெண் போலீஸ் உதவி ஆய்வாளர் விடுப்பு கடிதம் எழுதும் போது ஏராளமான எழுத்துப்பிழைகள் இருந்ததையடுத்து, அவரின் தேர்வுத்தாளை ஆய்வு செய்தபோது முறைகேடான வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. இதையடுத்து பெண் உதவி ஆய்வாளரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விடுப்பு கடிதத்தை எழுத்துப் பிழையோடு தவறாக எழுதி, போலீஸில் சிக்கிக்கொண்டு கம்பி எண்ணுகிறார் இந்த உதவி ஆய்வாளர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கன்குனு மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மோனிகா. உதவி ஆய்வாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சமீபத்தில் பயிற்சி எஸ்ஐ ஆக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சில நாட்கள் மோனிகாவுக்கு விடுப்பு எடுக்க நேர்ந்தது.இதனால் உதவி ஆய்வாளர் மோனிகா உயர் அதிகாரிகளுக்கு விடுப்பு கடிதம் எழுதி விடுப்பு கோரினார். ஆனால், மோனிகாவின் கடிதத்தைப் பார்த்த உயர் அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிங்க: 16 மாநிலங்களில் சைபர் மோசடி... 10 ஆயிரம் கோடி சுருட்டிய பலே கில்லாடிகள்..!
விடுப்பு கடித்தத்தில் ஏராளமான தவறுகள், எழுத்துப் பிழைகள், ஒரு காவல் ஆய்வாளராக இருக்கும் ஒரு அதிகாரி எளிமையான விடுப்பு கடிதத்தில் இவ்வளவு பிழைகள் விட்டுள்ளாரே என்று சந்தேகம் எழுந்தது. 2021ம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் 34வது ரேங்கில் மோனிகா தேர்ச்சி பெற்றிருந்தார் என்றும் அவரின் ரெக்கார்டை ஆய்வு செய்தபோது அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆனால், விடுப்பு கடிதத்தில் இருக்கும் பிழைகளுக்கும், மோனிகா 34-வது ரேங்கில் தேர்ச்சி பெற்றதற்கும் தொடர்பே இல்லை என்று அதிகாரிகள் யோசித்தனர்.

200 மதிப்பெண்கள் கொண்ட இந்தி மொழித் தேர்வில் 184 மதிப்பெண்கள் மோனிகா எப்படி பெற்றார், அதிக மதிப்பெண்கள் பெற்ற மோனியா இந்தியில் ஒரு விடுப்பு கடிதம் எழுத ஏன் இப்படி எழுத்துப்பிழைகள் விட்டுள்ளார் என்று உயர் அதிகாரிகள் ரகசியமாக விசாரணையைத் தொடங்கினர். ஒரு விடுப்பு கடிதத்தில் கூட என்ன எழுத்துப் பிழைகள் விட்டுள்ளோம், அதை சரிசெய்ய முடியாத நிலையில்தான் உதவி ஆய்வாளர் இருக்கிறாரா என்ற சந்தேகத்தில் மோனியா தேர்வு எழுதிய மையத்துக்கும், போலீஸ் தேர்வு மையத்துக்கும் அதிகாரிகள் தகவல் அனுப்பி அவர் தேர்வு எழுதிய தேர்வுத்தாள், வீடியோ உள்ளிட்டவற்றை கேட்டு வாங்கினர்.
2021, செப்டம்பர் 15ம் தேதி அஜ்மீர் நகரில் நடந்த போலீஸ் உதவி ஆய்வாளர் தேர்வில் மோனிகா பங்கேற்று தேர்வு எழுதியுள்ளார். அந்த வீடியோவை போலீஸார் ஆய்வு செய்தனர். இதையடுத்து நேர்முகத் தேர்வில் மோனிகா எடுத்த மதிப்பெண்களை ஆய்வு செய்தபோது, அவர் 15 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். எழுத்துத் தேர்வில் சிறப்பாக செய்த ஒரு பெண், நேர்முகத் தேர்வில் ஏன் மோசமாக செயல்பட்டார் என்ற சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு வலுத்தது.

இதனால் மோனிகாவை அழைத்து உயர் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, அவர் தேர்வு மையத்தில் ப்ளூடூத் பயன்படுத்திதான் தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். இதற்காக பவ்ரவ் குமார் என்பவருக்கு ரூ.15 லட்சம் அளித்து மோசடி செய்து பதிலை ப்ளூடூத் மூலம் பெற்று தேர்வு எழுதியதை ஒப்புக்கொண்டார். இதனால் இந்தி தேர்வில் 184 மதிப்பெண்களும், பொது அறிவு தாளில் 161 மதிப்பெண்களும் எடுக்க முடிந்தது என மோனிகா விசாரணையில் தெரிவித்தார்.
இந்த விசாரணையைடுத்து மோனிகாவுக்கு உதவிய பவ்ரவ் குமார், மற்றும் கலீர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மோனிகா பணிவிடுப்பு முடிந்து ஜெய்பூர் போலீஸ் அகாடெமியில் பயிற்சி எடுத்து வந்த நிலையில் அவரையும் கைது செய்தனர்.
2024 ஜூன் 5 முதல் 2024 ஜூலை 2 முதல் மோனிகா மருத்துவ விடுப்பு எடுத்தார். அதற்கான மருத்துவசான்று ஏதும் தரவில்லை.அதன்பின் இந்தியில் ஒரு கடிதம் எழுதி, 2024 நவம்பர் 11ம் தேதி போலீஸ் பயிற்சியில் சேர்வதாக கையால் எழுதி உயர் அதிகாரிகளுக்கு எழுதியபோதுதான் சிக்கிக்கொண்டார்.
இதையும் படிங்க: ரூ.80 ஆயிரத்திற்கு விற்பனை? வாத்து பண்ணையில் கொத்தடிமையான சிறுவர்கள்.. பாசக்கார தந்தையும், முதலாளியும் கைது..!