மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு திடீரென தலை வழுக்கை விழுந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த மக்களின் நகம் சுருங்கி விழத் தொடங்கியுள்ளது. புல்தானா மாவட்டம், ஷேகான் தாலூகாவில் உள்ள பல்வேறு கிராம மக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென தலைமுடி கொட்டி, வழுக்கை விழுந்தது. இதற்கான காரணம் புரியாமல் தவித்தனர். ஏறக்குறைய 200 பேரின் தலையில் இருந்த முடிவிழுந்து வழுக்கைத் தலை ஏற்பட்டது.

இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறையினர், உணவுப்பாதுகாப்பு துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதி கிராம மக்கள் சாப்பிட்ட கோதுமையில் நச்சுத்தன்மை அதிகம் கலந்திருந்தது தெரியவந்தது. இதனால்தான் தலையில் முடிவிழுந்து வழுக்கை ஏற்பட்டது கண்டறிப்பட்டது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ‘இந்தி மொழி’யை திணித்தால் போராட்டம் வெடிக்கும்.. ராஜ் தாக்ரே எச்சரிக்கை..!
இந்த சம்பவம் நடந்து முடிந்து சில வாரங்கள் ஆகிய நிலையில் மற்றொரு உடல்நலப் பிரச்சினையில் அப்பகுதி மக்கள் சிக்கியுள்ளனர். அதாவது அப்பகுதி மக்களின் நகம் காய்ந்து, பெயர்ந்து விரல்களில் இருந்து விழத்தொடங்கியுள்ளது.

புல்தானா நலத்துறை அதிகாரி மருத்துவர் அனில் பங்கர் ஊடகங்களிடம் கூறுகையில் “ஷேகான் தாலுகாவில் உள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த 29 மக்களுக்கு திடீரென கை விரல்களில் இருந்த நகம் பெயர்ந்து விழத்தொடங்கியுள்ளது. இவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
கிராமத் தலைவர் ராம் தர்கார் கூறுகையில் “ கைவிரல்களில் நகம் விழுதல் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. முதல் இரு நாட்களில் நகத்தில் விரிசல் ஏற்பட்டது, பின்னர் திடீரென நகம் பெயர்ந்து கிழே விழுந்தது. இது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரியிடம் தெரிவித்தோம். அவர்கள் வந்து எங்களிடம் விசாரித்து சென்றனர்” எனத் தெரிவித்தார்.

மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரசாந்த் தாங்கடே கூறுகையில் “இதுவரை 30 பேரின் கை விரல்களில் நகம் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது, இவர்களின் ரத்த மாதிரி கொண்டு செல்லப்பட்டுள்ளது வந்தபின் காரணம் தெரிய வரும்” எனத் தெரிவித்தார்.
மண், குடிநீர், நிலத்தடி நீரில், குறிப்பிட்ட சில வகை உணவுகளில் செலினியம் அதிகரித்தது காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். 2024 டிசம்பர் முதல் 2025 ஜனவரிவரை இந்த பகுதியில் 18 கிராமங்களைச் சேர்ந்த 279 பேருக்கு திடீரென தலைமுடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: SCHOOL BAG-ல் கத்தி, காண்டம்.. எப்படியாச்சு பிள்ளைகள காப்பாத்துங்க.. கதறும் பெற்றோர்..!