தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது தொடர்கடையாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் பாம்பனில் இருந்து இன்னாசி முத்து என்பவரின் நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தனுஷ்கோடி - கச்சத்தீவு இடையே மீன் பிடித்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

7 மீனவர்களை தாக்கி வலையை வெட்டி கடலில் வீசி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்துள்ளது. நாட்டுப்படகை இலங்கை கடற்படை சேதப்படுத்தியதால் பழுதுபார்க்க ரூ.4 லட்சம் செலவாகும் என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராணுவம் மீது அவதூறு.. வைகோ எம்.பி. பதவியை ரத்து செய்யணும்... கொந்தளிக்கும் பாஜக.!!
இதையும் படிங்க: இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு.. மூட்டை முடிச்சுகளுடன் காஸாவைவிட்டு வெளியேறும் மக்கள்..!