முன்பு உலகக் கோடீஸ்வரர்களில் முதலிடத்தில் இருந்த இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கோடீஸ்வரர் கௌதம் அதானி தனது மகன் திருமணத்தை மிக மிக எளிமையாக நடத்தி அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு தான தர்மங்களை வாரி வழங்கி உள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த அதானி சகோதரர்களில் மிகவும் பிரபலமானவர் கௌதம் அதானி இவரது மகன் ஜீத் அதானிக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெய்மின்ஷாவின் மகள் திவாவுக்கும் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் திருமணம் நடைபெற்றது. அகமதாபாத் நகரின் அதானி சாந்திகிராம் டவுன்ஷிப் பகுதியில் உள்ள பெல்வீடர் கிளப்பில் இந்த திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் அதானி குடும்பத்தினர் மற்றும் முக்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழிலதிபரான கௌதம் அதானி தனது மகன் ஜீத் அதானி திருமணத்தை முன்னிட்டு பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை நன்கொடையாக பல நலத்திட்ட உதவிகளுக்கு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் பல ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மூடப்படும் ஹிண்டன்பர்க் நிறுவனம்...

முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜீத் மற்றும் திவா ஆகியோரின் திருமணத்திற்கு ஆகும் மிக பிரம்மாண்டமான கட்டமைப்பு களுக்கான செலவை மொத்தமாக நன்கொடையாக அளிக்க முடிவு செய்து விட்டதாக அதானி குடும்பம் அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்த பத்தாயிரம் கோடி ரூபாயில் சுகாதாரம் கல்வி திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பெரிய அளவிலான திட்டங்களுக்கு பிற்காலத்தில் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் தரமான மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும் இந்த நன்கொடை பணம் பயன்படுத்தப்படும் என்றும் கௌதம அதானி தெரிவித்துள்ளார்.
கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த செயலை கண்ட குஜராத் மக்கள் மட்டுமின்றி பிற மாநிலத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணம் ஒருவர் கையில் இருந்தால் மட்டும் போதாது அதை ஏழை எளிய மக்களுக்கு இல்லாதவர்களுக்கு செலவு செய்ய மனம் வர வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் உலகின் மிகப் பிரபலமான பாடகர்கள் நடிகர்கள் விஐபிகள் முன்னாள் பிரதமர்கள் என நூற்றுக்கணக்கான பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு உபசரித்ததில் பல நூறு கோடி ரூபாய் பண விரயம் செய்யப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்தது.
அம்பானி குடும்பம் போல் இல்லாமல் அதானி குடும்பம் நல்ல முறையில் சிந்தித்து ஆடம்பர திருமணத்திற்கு பதில் அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவ முன் வந்திருக்கும் இந்த செயல் பாராட்டுக்குரியது.
இதையும் படிங்க: அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..