பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மனதைத் தொடும் வகையில், சேவை, பக்தியின் வெளிப்பாடாக, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தன் கையால் பூரி சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் தற்போது நடைபெற்று வரும் கும்பமேளாவிற்கு, 62 வயதான கோடீஸ்வரர் தனது மனைவி பிரிதி அதானியுடன் சென்றார்.
உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமான மகா கும்பமேளா, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பக்தர்களை புனித சடங்குகளில் பங்கேற்கவும் ஆன்மீக நிறைவைத் தேடவும் ஈர்க்கிறது. இந்த ஆண்டு, அதானி குழுமம், இஸ்கான் (சர்வதேச கிருஷ்ண பக்தி சங்கம்) உடன் இணைந்து, நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: ‘இந்தியாவின் நட்பு வேண்டாமா..?’ அமெரிக்காவில் தொடங்கப்பட்ட வழக்கு... அதானிக்கு திடீர் திருப்பம்..!
கும்பமேளாவில் உள்ள இஸ்கான் கோயில் முகாமை அடைந்ததும், கௌதம் அதானி 'சேவை'யில் பங்கேற்றார். அவர் ஒரு பெரிய கொப்பரையில் உணவைக் கிளறி, பக்தர்களுக்கு வழங்கப்படும் புனித உணவான மகாபிரசாதத்தைத் தயாரித்தார். இந்த பிரமாண்டமான மத நிகழ்வில் அதானியின் ஈகை குணம் பக்தியின் மீதான அவரது அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. 
சமையலறையில் உணவு தயாரித்த பிறகு கௌதம் அதானியும், அவரது மனைவி பிரிதி அதானியும் இஸ்கான் முகாமில் கூடியிருந்த பக்தர்களுக்கு மகாபிரசாதத்தை நேரில் வழங்கினர்.அதானி குழுமமும், இஸ்கான் அமைப்பும் மகா கும்பத்தில் தினமும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு உணவு வழங்குகிறது. பிரக்யாராஜில் உள்ள 40 மையங்களில் உணவு விநியோகிக்கப்படுவதாக மதுகாந்த் தாஸ் கூறினார்.
அதானி குழுமத்துடன் இணைந்து, இஸ்கான் (சர்வதே சகிருஷ்ண பக்தி சங்கம்) நடந்து கொண்டிருக்கும் மகா கும்பத்தில் தினமும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்குகிறது என்று ஆன்மீக அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இங்குள்ள ஹர்ஷ்வர்தன் மார்க்கில் உள்ள ஒரு முகாமில், இஸ்கானின் ஒரு சமையலறை ஒரு முகாமில் 30,000 முதல் 35,000 பேருக்கு உணவு தயாரிக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று நேரமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று மதுகாந்த் தாஸ் கூறுகிறார்.
இஸ்கானின் உணவு - பருப்பு, சோளே அல்லது ராஜ்மா, காய்கறிகள், ரொட்டி, அரிசி, இனிப்புகளில் ஹல்வா அல்லது பூந்தி, லட்டு ஆகியவை கொடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் முற்றிலும் சமச்சீரானது. இந்த உணவுகள் விறகு, மாட்டு சாண கேக்குகளால் ஆன நெருப்பின் மீது களிமண் அடுப்பில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் சுவையும் அற்புதமாக உள்ளது. 
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோல்டிங் பகுதிகள் உட்பட பிரயாக்ராஜ் முழுவதும் 40 மையங்களில் உணவு விநியோகிக்கப்படுவதாக மதுகாந்த் தாஸ் கூறுகிறார். அங்கு முக்கிய குளியல் நாட்களில் பக்தர்கள் கூட்டம் நிறுத்தப்படும்.
கண்காட்சி, சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 15,000 ஊழியர்களுக்கும் உணவு விநியோகிக்கப்படுகிறது. பிரயாக்ராஜ் முழுவதும் இஸ்கான் மூன்று சமையலறைகளை அமைத்துள்ளது. அவை பிரயாக்ராஜ் சந்திப்புக்கு அருகிலுள்ள குஸ்ரோபாக், செக்டார் 6 ல் உள்ள நேத்ரா கும்பம், செக்டார் 19ல் உள்ள இஸ்கான் கோயில் வளாகம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. உணவு பிரசாதம் இங்கிருந்து தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு கும்பமேளாவிற்கும் இஸ்கான் வருகிறது. எனவே கண்காட்சி தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே மாட்டு சாண கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. அதானி குழுமத்தால் வழங்கப்பட்ட உணவு விநியோகத்திற்காக 100 வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மதுகாந்த் தாஸ் கூறினார்.
அதானி குழுமம்- இஸ்கானைச் சேர்ந்த மூன்றரை ஆயிரம் தன்னார்வலர்கள் தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள். முழு திட்டமும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இந்த 45 நாள் கண்காட்சியில் எங்கும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார். அதானி குழுமம் கைகோர்த்ததன் மூலம், உணவு பிரசாதத்தை விநியோகிக்கும் இஸ்கானின் திறன் 8-10 மடங்கு அதிகரித்துள்ளது என்று மற்றொரு இஸ்கான் அதிகாரி கூறினார்.
இதையும் படிங்க: ட்ரம்ப் அரசுக்கு பணிகிறதா மோடி அரசு? 18 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகளை தாயகம் அழைத்துவர மத்திய அரசு திட்டம்...