ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் அமெரிக்கைவை விட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்புவது குடியேற்ற விதிகளால் கடினமாகிவிடும் என எச்சரித்துள்ளன.

அமெரிக்காவில் தங்கி வேலை செய்ய இந்தியர்களுக்கு எச்1பி விசா வைத்திருந்தாலும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளிநாட்டுக்குச் சென்று திரும்பினால் குடியேற்றப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன என தி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று க்ரீன் கார்டு வைத்திருப்போர், எச்1 பி விசா வைத்திருபபோரும் கூட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பினாலே அவர்களை மீண்டும் அமெரிக்காவில் நுழைய குடியேற்றஅதிகாரிகள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று சட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த வழக்காடுநிறுவனம் வைத்திருக்கும் மால்கம் கோஷி கூறுகையில் “ நாங்கள் இப்போது ஏராளமான கவலையான மற்றும் பதற்றமான சம்பவங்களைப் பார்க்கிறோம். அமெரிக்க அரசு நிர்வாகம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது, என்ன நடக்கிறது என்று எங்களுக்குப் புரியவில்லை” எனத் தெரிவித்தார்.
தி வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டுக்கு இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் அளித்த பேட்டியில் “ அமெரிக்காவில் தற்போது நிலவும் சூழலைப் பார்த்தால் நாங்கள் இந்தியாவுக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம். ஒருவேளை இந்தியாவுக்குச் சென்றால், நாங்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வர முடியாது. அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் ஒவ்வொருவரும் சட்டவிரோதமாகவே தங்கியுள்ளனர் என்ற ஊகம் அமெரிக்க அரசுக்கு இருக்கிறது. நாங்கள் எங்கேனும் வெளியே குடும்பத்தினருடன் சென்றால், தேவையான ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டியதிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் எச்1பி விசா வழங்குவதில் அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு இரு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒரு தரப்பினர், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்து வருவதற்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர், அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே கடந்த இரு மாதங்களுக்குமுன் மோதல் வெடித்தநிலையில், அதில் தலையிட்டஅதிபர் ட்ரம்ப், இனிமேல், எச்1பி விசா வழங்குவதிலும், திறன்மிகு பணியாட்கள்வருவதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே 2025ம் ஆண்டில் அமெரிக்கா அரசு எச்1பி விசா அதிகமாக அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக வழங்கியுள்ளது ஏறக்குறைய 9,265 ஊழியர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதுபோல் எந்த நிறுவனத்துக்கும் அனுமதி தரப்படவில்லை. காக்னிசென்ட் நிறுவனத்துக்கு 6321 விசாக்கள், கூகுள் நிறுவனத்துக்கு 5364 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள், டெஸ்லா நிறுவனங்களுக்கும் விசா தரப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!