'பிரச்சினையை உடனடியாக நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்; இல்லை என்றால் நாங்கள் தலையிட வேண்டியது இருக்கும்" என்று நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்த மோதல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் வழக்குகள் விவரம் குறித்து பார்க்கலாம்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ரவி அவற்றை கிடப்பில் போட்டு வருவதாக புகார் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால வரம்புக்குள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்து இருந்தது.
இதையும் படிங்க: "தமிழக அரசுடன் மோதல்: உடனே தீர்வு காணுங்கள்...இல்லையேல்..." கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை...

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "கவர்னர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர். இது போன்ற விவகாரங்களில் எல்லாம் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கவர்னர் எதிர்பார்க்கிறாரா?" என்று கூறியதுடன், அவருக்கு கண்டனமும் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் புதிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
" தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாட்டில் ஆயுஸ் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தும் மசோதா, தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்ன்மென்ட் அனுப்பி வைக்கப்பட்டும், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார்.
தமிழ்நாடு அமைச்சரவையின் ஆலோசனைக்குப் பிறகும் பத்து மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக கவர்னர் அனுப்பி வைத்திருக்கக் கூடாது. இது சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற விசாரணையை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர் செயல் பட்டு வருகிறார். இந்த நிலையில் 7 மசோதாக்களுக்கு கவர்னரின் ஆலோசனைப்படி ஒப்புதல் அளிப்பதை ஜனாதிபதி நிறுத்தி வைத்திருந்தார். ஒரு மசோதாவுக்கு மட்டும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். மீதமுள்ள இரண்டு மசோதாக்களும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
பத்து மசோதாக்கள் தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்தபோது கவர்னரும் மத்திய அரசும் தலையிட்டு இருப்பது உச்ச நீதிமன்றத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழ்நாடு அரசின் மனுவை பலனற்று போக செய்யவும், விசாரணையில் தோல்வியுற செய்யும் நோக்கத்திலும் கவர்னரும் மத்திய அரசும் மரியாதையற்ற வகையில் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கவர்னரை அழைத்து பேசிய தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஆலோசனை வழங்கியிருந்தது. அதன் அடிப்படையிலும் கவர்னர் அழைத்ததின் பேரிலும் முதலமைச்சரும் கவர்னர் மாளிகைக்கு தேநீர் விருந்துக்காக டிசம்பர் 30ஆம் தேதி அன்று சென்றார்
அமைச்சரவையின் ஆலோசனையின் படி கவர்னர் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கோரிக்கை மனுவில் முதல்வர் தெரிவித்து இருந்தார். முதல் அமைச்சருடனான இந்த சந்திப்புக்கு பிறகும் கவர்னர் இந்த விவகாரம் தொடர்பான வழக்கை பலனற்றதாகிவிட முயற்சி செய்ததுடன் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும் அனுமதியை வழங்காமலும் கைதிகளின் முன் விடுதலை தொடர்பான கோப்புகள் குறித்து முடிவு எடுக்காமலும் இருக்கிறார்
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்ததைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னருக்கு முதலமைச்சர் கடந்த மார்ச் 23ஆம் தேதி அன்று கடிதம் எழுதினார். இருப்பினும் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்துவிட்டார். குற்றவாளி என்று தீர்ப்பு தான் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறதே தவிர ரத்து செய்யப்பட வில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு புதிய விளக்கத்தை அளித்திருந்தார்.

அரசியல் சட்ட பண்புகளுக்கு கவர்னர் மதிப்பளிக்கவில்லை பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்கு எதிராகவும் பதவி பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னருக்கு உத்தரவிட கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து பதவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.எனவே பத்து மசோதாக்களையும் பரிசீலனைக்காக ஜனாதிபதிக்குவ் கவர்னர் அனுப்பி வைத்த முடிவு சட்டவிரோதமானது என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவை மேரிய செயல் என்றும் அறிவிக்க வேண்டும் மசோதாக்கள் தொடர்பாக ஜனாதிபதி எடுத்த முடிவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் பத்து மசோதாக்களையும் மீண்டும் கவர்னரிடம் மத்திய அரசு ஒப்படைக்கும்படியும் அவற்றுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் 200 வது பிரிவின்படி 30 அளிக்கவும் கவர்னருக்கு உத்திராட வேண்டும் இந்த இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் துணை வேந்தர்கள் நியமனத்தில் வேந்தராக இருக்கும் கவிஞரின் செயல்பாடுகள் தொடர்பாக அவருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன.
நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கில் விசாரித்து மோதல் போக்குக்கு நீங்களே தீர்வு காணுங்கள் இல்லை என்றால் நாங்கள் தலையிட வேண்டியது இருக்கும் என்று கவர்னருக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து விசாரணை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது தமிழக அரசின் மூத்த வக்கீல் பி வில்சன் துணைவேந்தர்கள் நியமனங்களை மேற்கொள்ள முடியாத நிலை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்வதாகவும் அதற்கு முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் நியமனத்தில் நிலவு முட்டுக்கட்டை அடுத்த விசாரணைக்குள் தீர்ந்து விட்டால் நல்லது இல்லை என்றால் தீர்த்து வைக்கப்படும் ரேட்டு மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தம் இயக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் அறிவித்தனர் பின்னர் வருகிற 22ஆம் தேதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆளுநருக்கு கருத்து சொல்லும் உரிமை இல்லை..அவமதிப்பது தவறு ..குட்டு வைத்த சபாநாயகர் அப்பாவு ..!