இந்திய தேசத்தின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக பாதுகாத்து வருகின்றனர். எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களில் வீர தீர செயல்களால் தான் நாட்டில் மக்கள் பாதுகாப்புடன் வாழ முடிகிறது என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார். அத்தகைய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் ஆளில்லா ட்ரோன் மூலம் எல்லை தாண்டி போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன. அவற்றை பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து ட்ரோனை சுட்டு விழ்த்தும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன.

பொதுவாக காஷ்மீர், பஞ்சாப் போன்ற பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் அதிகளவில் ஊடுருவல்கள் நடைபெறுவது வழக்கம். அப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி, இந்திய தேசத்தில் நிலவும் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கவே அப்பகுதியில் அதிகப்படியான பாதுக்காப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் தென்பட்டால் உடனே அதிரடியில் இறங்கும் பாதுகாப்பு படைவீரர்கள் தேசத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் போட்ட சாப்பாட்டு இலை இதுதான்... 'வாட் இஸ் திஸ் ப்ரோ..?'- கொதிக்கும் தொண்டர்கள்..!

இந்நிலையில் இன்று அதிகாலை பஞ்சாபின் பதான்கோட் செக்டாரில் உள்ள தாஷ்பதான் எல்லைப்புற காவல் நிலையத்திற்கு அருகே எல்லையில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தென்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நிழைவதை பாதுகாப்பு படைவீரர்கள் பார்த்துள்ளனர், எல்லையை கடக்க முயன்றவரை பாதுகாப்பு படையினர் எச்சரித்த நிலையில் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல், எல்லையை கடந்துள்ளார். எச்சரிக்கையை மீறி அவர் எல்லையை கடக்க முயன்றதால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இவ்வாறு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் உயிர் இழந்தார். உயிரிழந்தவர் குறித்து அடையாளம் காணப்பட்டு வருவதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு... மு.க.ஸ்டாலின் கருத்துக்கு BRS கட்சித் தலைவர் ஆதரவு..!