"கண்ணா 2 லட்டுகள் தின்ன ஆசையா!?".. இந்த ஜோக் நாம் அனைவருமே கேள்விப்பட்டு ரசித்த நகைச்சுவைகளில் ஒன்று.
அதை உண்மையாக்கும் விதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக ஒவ்வொரு ஆண்களும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாய வழக்கமாக இருந்து வருகிறது. அதற்கு மேலும் மனைவிகளை திருமணம் செய்து அவர் கொள்வது என்றாலும் அது அவர்களுடைய விருப்பம்!

எதற்கு தெரியுமா.. மூடநம்பிக்கை நிறைந்த இந்த பழக்கம் வந்தது என்று? முதலில் திருமணம் செய்து கொள்ளும் மனைவிக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அப்படியே அந்தப் பெண் கருத்தரித்தாலும் ஆண் குழந்தை பிறக்காது என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாக உள்ளது. மகன்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஜெய் சால்மர் அருகே உள்ள ராம் தியோ-கி- பஸ்தி என்ற கிராமத்தில் தான் இந்த விந்தையான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வங்கிகள் வேலைநிறுத்தம்: 48 மணிநேரம் வங்கி செயல்பாட்டை முடக்க முடிவு
600 குடும்பங்களை கொண்ட அந்த சிறிய கிராமத்தில் எல்லா வீடுகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை பார்க்கலாம். அவர்களுடைய இந்த மூடநம்பிக்கை அறிவியலுக்கு பொருந்தாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. தற்போது இளம் படித்த தலைமுறையினர் தலையெடுத்த பிறகு இந்த பழக்கத்தை மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பாரம்பரியத்தை கைவிட முடியாது என்பதில் முதியவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அப்படியே அவர்கள் மனதை மாற்றினால் கூட ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையை பின்பற்ற இப்போது சாத்தியம் இல்லாமல் போய்விடும் போலும்! ஏன் தெரியுமா? இந்த வித்தியாசமான பழக்கவழக்கத்தின் காரணமாக கிராமத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களுடன் ஒப்பிடும்போது ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் வேறு வழியின்றி பழைய சம்பிரதாய முறையையே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாக அந்த கிராமவாசி ஒருவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவின் 31 முதல்வர்களில் 14 பேர் பாஜக..! கூடும் காவி கணக்கு