எதிரி நாடுகளின் ட்ரோன்களை வானிலேயே தாக்கி அழிக்கும் அதிசக்தி வாய்ந்த லேசர் ஆயுதத்தை இந்தியா ராணுவம் கண்டுபிடித்து, வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த லேசர் ஆயுதம், உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது, இப்போது அடுத்ததாக 4வது நாடாக இந்தியாவிடம் இருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் குர்னூல் நகரில் உள்ள நேஷன் ஓபன் ஏர் ரேஞ்ச் (என்ஓஏஆர்) லேசர் ஆயுதமான எம்கே-II(A) லேசர் டிஇடபிள்யு ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த லேசர் ஆயுதம் வானில் செல்லும் ட்ரோன்களை லேசர் கதிர்வீச்சு மூலம் சுட்டு வீழ்த்தும் சக்தி கொண்டது என்று ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ)தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சித்திரையே வா முத்திரை பதிக்க.. சுசீந்திரம் கோயிலில் காய்கனிகள் அலங்காரத்துடன் சிறப்பு வரவேற்பு..
டிஆர்டிஓ தலைவர் சமீர் வி காமத் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “எனக்குத் தெரிந்தவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே ட்ரோன்களை வானிலேயே தாக்கி அழிக்கும் லேசர் ஆயுதம் இருக்கிறது. அதன்பின் இந்தியா அதே திறனுடைய லேசர் ஆயுதத்தை உருவாக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. உலகிலேயே 4 அல்லது 5வது நாடாக இந்த லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளோம்.

பிரபல ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் லேசர் ஆயுதத்தைப் போன்று இந்த ஆயுத்திலும் லேசர் ஆயுதம் செயல்படும். இன்னும் இந்த ஆயுதத்தில் பல புதிய நுட்பங்கள் சேர்க்கப்பட உள்ளன. இது சிறிய பயணத்தின் தொடக்கம்தான். எங்களின் ஆராய்ச்சிக் கூடம் விரைவில் புதிய உச்சத்தை எட்டி, விரைவில் எங்கள் இலக்கை எட்டுவோம்.
எனர்ஜி மைக்ரோவேவ்ஸ், எலெக்ட்ரோமேக்னடிக் பல்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி செயல்படுத்தும் முறையை ஆய்வு செய்து வருகிறோம். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் லேசர் ஆயுதங்கள் போன்று அந்தத் தொழில்நுட்பத்தில் இந்த ஆயுதத்தில் சேர்க்க முயன்று வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

லேசர் ஆயுதம் எப்படி செயல்படுகிறது?
எம்கே- II(A) லேசர் டிஇடபிள்யு ஆயுதம் வானில் நீண்ட தொலைவில் செல்லும் ட்ரோன்களை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. வானில் எதிரி நாடுகளின் ட்ரோன்கள் செல்வதைக் கண்டறிந்தார், அதை நோக்கி சக்தி வாய்ந்த லேசர் ஒளியைப் இலக்கை நோக்கி பாய்ச்சி, அதை தாக்கி அழிக்கும். வழக்கமான ஆயுதங்கள் ,ராக்கெட்டுகளோடு ஒப்பிடும்போது, லேசர் ஆயுதம் விலை குறைவு, அதிக சேதங்களை விளைவிக்கக்கூடியது.
இதையும் படிங்க: இது என்.டி.ஏ கூட்டணி இல்ல!!எடப்பாடி கூட்டணி..! அல்லு கிளப்பும் அதிமுக ஆதரவாளர்கள்