''கடந்த காலத்தில் எதிர்கட்சியாக தொடர்ச்சியாக திமுக நடத்திய போராட்டங்களால் இன்று பெரிய தொழில்கள் இங்குவர விரும்பவில்லை''எனத் திமுக மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
''தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் துன்பறுத்தலை மத்திய பா.ஜ.க அரசு நிறுத்த வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார்.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததாக குற்றம்சாட்டி, அனைத்து ஒன்றியங்களிலும் தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இரண்டாவது இடத்துக்குதான் இப்போ போட்டி.. முதல்வர் மு.க. ஸ்டாலின் சரவெடி..!!
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,'' தமிழகம் முழுதும் 1,600 இடங்களில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று ' எங்கள் பணம் எங்கே ?' என்ற இடி முழுக்கக் கேள்வியை எழுப்பிய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுடன் தி.மு.க.,தோளோடு தோள் நின்றது. கொளுத்தும் வெயிலில் உழைத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மறுப்பது நிர்வாகத் தோல்வி மட்டும் அல்ல கொடுமை. பா.ஜ.க அரசு வேண்டும் என்றே நிதியை நிறுத்தி வைத்து, ஓட்டு மூலம் நிராகரித்த தமிழக கிராமப்புற ஏழை மக்களை தண்டித்து வருகிறது.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியான ரூ.4,034 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்'' எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள சமூக ஆரலர்கள், ''தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் துன்பறுத்தலை முழுவதும் செய்வது மாநில அரசுதான். மதுபான ஊழலை முழுவதும் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாதவன் போல நடிப்பது எப்படி? அதை மூடி மறைக்க இப்படி ஒவ்வொரு திட்டத்திற்கும் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று சொன்னால் கேட்பார் யாருமில்லை.

கடந்தகாலத்தில் எதிர்கட்சியாக தொடர்ச்சியாக திமுக நடத்திய போராட்டங்களால் இன்று பெரிய தொழில்கள் இங்குவர விரும்பவில்லை. இன்று ஸ்டெர்லைட் குஜராத்திற்கு மாறி உற்பத்தி துவங்கிவிட்டது. கன்னியாகுமரியில் கன்டெய்னர் உற்பத்தி முனையமும் கைவிட்டு போனது. சாம்சங் வெளியேறுவது உறுதி. மேற்கு வங்கம் போல தொழிலதிபர்கள் தலைதெறிக்க ஓடி வெளியேறும் மாநிலமாக நாம் மாறியதற்கு திமுகவின் கடந்தகால நடத்தையும், ஆட்சியில் இருந்தால் அடிக்கும் கமிஷனும் காரணம்'' எனத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்வதாக உறுதி பெற்றபின் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? இ.பி.எஸை திணறடிக்கும் திமுக..!