டெல்லியில் நடந்த மாநிலங்களவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் குறித்து கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அரசியல் ஜனநாயகத்திற்கு எதிராக artical 142 ஒரு அணு ஆயுதமாக மாறி உள்ளது என்றும் 30க்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ள நிலையில் 5 நீதிபதிகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள் என்பது சரியான நடைமுறை அல்ல என்றும் கூறினார்.

ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக உள்ள ஆர்டிக்கல் 142 ஐ சீரமைக்க வேண்டியது அவசியம் என தெரிவித்த அவர், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா என கேள்வி எழுப்பினார். குடியரசு தலைவர் பதவி என்பது மிக மிக உயர்ந்த நிலை மற்றும் மதிப்பு கொண்டது., நாட்டில் அமலில் உள்ள சட்டம் நீதிபதிகளுக்கு பொருந்தாது என்று நினைக்கின்றனர். நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்., நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பேசினார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் பிறந்தநாள்..! பிரதமர் மோடி, ஜனாதிபதி மரியாதை..!

நீதிபதிகள் மீது வழக்கு தொடுக்க முடியாது என நினைக்கிறார்கள் கோடிக்கணக்கான பணம் சிக்கியது தொடர்பாக ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அரசமைப்பின் 145 பிரிவை விளக்குவது தான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை என்றும் தற்போது நாடாளுமன்றம் செய்ய வேண்டிய வேலையை நம் நாட்டில் நீதிபதிகள் செய்து கொண்டிருக்கின்றனர் எனவும் உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது எனவும் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஜனாதிபதிக்கே காலக்கெடு..! சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!